TNPSC October 2023 Current Affairs in Tamil

SAI IAS ACADEMIC CENTRE,Krishnagiri

1கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பயன் பெற  கீழ்க்கண்ட தகுதிகளை பெற்றிருக்க வேண்டும்.சரியானவறறை தேர்ந்தெடுக்கவும்.

1.ஆண்டுக்கு ரூ.2.5 இலட்சத்திற்குக் கீழ் வருமானம் ஈட்டும் குடும்பங்கள்.

2.ஐந்துஏக்கருக்குக் குறைவாக நன்செய் நிலம்அல்லது பத்துஏக்கருக்குக் குறைவாகப் புன்செய் நிலம் வைத்துள்ள குடும்பங்கள்.

3.ஆண்டிற்கு வீட்டு உபயோகத்திற்கு 2600 யூனிட்டிற்கும்  குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்கள்.

4.செப்டம்பர்15,2002  க்கு முன் பிறந்தவர்கள்

 A)ஒன்று இரண்டு மட்டும் சரி

B)ஒன்று இரண்டு மூன்றுமட்டும்சரி.

C)ஒன்று இரண்டு நான்கு மட்டும்

D) சரி அனைத்தும் சரி

சரியான விடை:C

கூடுதல் தகவல்கள்:ஆண்டிற்கு வீட்டு உபயோகத்திற்கு 3600 யூனிட்டிற்கும் குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்கள்

2)பொருத்துக

a) ஆப்ரேஷன்-அஜய்   – 1.உக்ரைன் ரஷ்யா போரின்போது  பாதிக்கப்பட்ட இந்தியர்களை   பாதுகாப்பாக தாய்நாட்டிற்கு கொண்டுவதற்கான நடவடிக்கை

b) ஆப்ரேஷன் காவேரி. 2.சிரியா துருக்கி பகுதிகளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது பாதிக்கப்பட்ட இந்தியர்களை பாதுகாப்பாக தாய் நாட்டுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கை

c) ஆபரேஷன் கங்கா. 3.இஸ்ரேல் போர் சூழல்களில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை பாதுகாப்பாகதாய்நாட்டுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கை

d) ஆப்ரேஷன் தோஸ்த் 4.சூடான் நாட்டில் நடைபெற்றஉள்நாட்டு கலவரங்களின் போதுபாதிக்கப்பட்ட இந்தியர்களை பாதுகாப்பாகதாய்நாட்டிற்கு கொண்டு வருவதற்கான செயல்பாடு

  A)a-2,  b-4,  c-1,  d-3

  B)a-1,  b-4,  c-2,  d-3

C)a-4,   b-2,  c-1,   d-3

D)a-3,   b-4,   c-1,  d-2

சரியான விடை:D

3.2021 ஆம் ஆண்டுக்கான தாதா சாகிப் பால்கே விருது யாருக்கு வழங்கப்பது.

A. சுனில் தத்து B.அசோக் குமார் C.ஆர் டி பர்மன்   D. வகிதா ரஹ்மான்.

சரியான விடை:D

4. எந்த வேளாண்மை கல்லூரிக்கு சமீபத்தில் புகழ்பெற் விஞ்ஞானி  எம் எஸ் சுவாமிநாதன் பெயர் சூட்டப்பட்டது.

A.அரசு வேளாண்மை கல்லூரி  தஞ்சாவூர்

B.கோவை வேளாண்மை கல்லூரி

C.அரசு வேளாண்மை கல்லூரி கிள்ளிகுளம் தூத்துக்குடி.

D. அரசு வேளாண்மை கல்லூரி மதுரை

சரியான விடை:A

5.உலகின் முன்னணி செஸ் வீரர் மேக்னஸ் கார்லெசன் என்பவரை கத்தார் நாட்டில் நடைபெற்ற மாஸ்டர்ஸ் போட்டியில் தோற்கடித்த இந்திய சதுரங்க கிராண்ட் மாஸ்டரின் பெயர் என்ன.

A.கார்த்திகேயன் முரளி

B.குகேஷ் பிரக்ஞானந்தா

C.வைஷாலி

D. மேற்கண்ட யாவரும் இல்லை

சரியான விடை:A

கூடுதல் தகவல்கள்:இந்தியாவில் உள்ள மொத்தம் 83  கிராண்ட் மாஸ்டர் களில் தமிழ்நாட்டில் இருந்து மட்டுமே 29  கிராண்ட்மாஸ்டர்கள் உருவாக்கியுள்ளனர்

6. சுதந்திரப் போராட்டத் தியாகி அஞ்சல் அம்மாள் அவர்களுக்கு எந்த ஊரில் சமீபத்தில் சிலை அமைக்கப்பட்டது.

    A.கடலூர்            B.சென்னை          C.சிதம்பரம்           D.விழுப்புரம்

சரியான விடை:A

7. சுந்தர் சிங் குஜார் என்பவர் சமீபத்தில் ஏன் செய்திகளில் இடம் பெற்றார் .

A.ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஓட்டப்பந்தயத்தில் தங்கும் வென்றார்.

B.ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் ஈட்டி எறிதலில்  உலக  சாதனை படைத்தார்.

 C.ஆசிய விளையாட்டுப் போட்டியில் பளு தூக்குதலில் உலக சாதனை  படைத்தார்

 D.ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் வட்டு எரிதலில் உலக சாதனை படைத்தார்.

சரியான விடை:B

8. இந்தியாவின் முதல் பசுமை ஆற்றல் தொல்லியல் தளமாக மாற உள்ள இந்திய கோயில் எது?

A.மகாபலிபுரம் கடற்கரை கோயில்.

B.கோனார் சூரிய கோயில்.

C.தஞ்சை பெரிய கோயில்.

D.காஞ்சி கைலாசநாதர் கோயில்.

சரியான விடை:A

9. தமிழகம் முழுவதும் அக்டோபர் ((2023) இரண்டாம் தேதி நடைபெற்ற கிராம சபை கூட்டங்களின் கருத்துரு என்ன ?

A. சமூக நீதி                   B.கிராமங்களை நோக்கி

C.அனைவருக்கும் அரசியல் அதிகாரம்    

D.அனைவருக்கும் அனைத்தும்.

சரியான விடை:D

10. நீலகிரி வரை ஆடு வளங்காப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக பணியாற்ற உள்ள பழங்குடி இனத்தவரின் பெயர் என்ன ?

A.இருளர்               B.குறும்பர்              C.முதுவன்             D.தோடர்.

சரியான விடை:C

11.தமிழகத்தில் அதிக வாக்காளர்களைக் கொண்ட சட்ட மன்ற  தொகுதி எது

   A.வில்லிவாக்கம்    B.செங்கல்பட்டு.    C.சைதாப்பேட்டை     D. சோழிங்கநல்லூர்

சரியான விடை:D

12. பெண்களுக்கு மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களில் 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்ட திருத்தம் எது?

A.106 வது சட்ட திருத்தம்  B.126 வது சட்ட திருத்தம்.C.128 வது சட்ட திருத்தம்  D.122 வது சட்ட திருத்தம்.

சரியான விடை:A

13. மாற்றுத்திறனாளிகளுக்கான இந்தியாவின் முதல்   உயர்தொழில்நுட்ப விளையாட்டுப் போட்டிகள் பயிற்சி மையம் (திவ்யஞ்சான்) எந்த நகரில் அமைந்துள்ளது

A.புதுடெல்லி   B.நாக்பூர்   C.குவாலியர் D.ஜெய்ப்பூர் 

சரியான விடை C

14.மின்ஆளுமை(E.Governance) சேவைகளை வழங்குவதில் முன்னணி வகிக்கும் மாநிலம் எது.

A.ஜார்க்கண்ட்.     B.ஹரியானா.       C.தமிழ்நாடு.          D.கர்நாடகா

சரியான விடை:B

கூடுதல் தகவல்கள்: SECOND PLACE-தமிழ்நாடு

15. பணி செய்யும் இடங்களில் வழங்கும் POSH(Prevention of Sexual  Harassment in the working place)  சட்டம் எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது. 

A.2015   B.2013  C.2020      D.2010

சரியான விடை:B

  16.Zealandia என்பது என்ன?

 A.விஞ்ஞானிகளால் சமீபத்தில் பசிபிக் பெருங்கடலுக்குஅடியில் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் எட்டாவது கண்டம்

 B.நியூசிலாந்து சமீபத்தில் அண்டார்டிகா கண்டத்திற்குஅனுப்பிய ஒரு  கடல் ஆராய்ச்சி கப்பல்.

C.இந்தியா அண்டார்டிகா பகுதியில் ஏற்படுத்தி உள்ள ஒரு கடல் ஆராய்ச்சி நிலையம்

D.மேற்கண்ட எதுவும் இல்லை

சரியான விடை:A

17.Operation Al-Aqsa Flood என்பது எதனோடு தொடர்புடையது.

A.தாலிபான் தீவிரவாதிகள் ஆப்கானிஸ்தானில் ஆட்சி அமைக்கமேற்கொண்ட நடவடிக்கை

B.அமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரவேலுக்கு எதிராக நடத்தியபோர்   நடவடிக்கை

C.துருக்கி நாடு உள்நாட்டு அமைதியை நிலை நிறுத்துவதற்காக எடுத்துள்ள நடவடிக்கை

 D.சிரியா துருக்கி பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்புகளிலிருந்து மீண்டு வர எடுக்கப்பட்ட நடவடிக்கை

சரியான விடை:B

18. ஐரோப்பாவில் முழுவதும் தனியாரின் துறையினால் விண்ணில் ஏவப்பட்ட  ஏவுகலத்தின் பெயர் என்ன

  A.மயூரா-1    B.ஐரோப்பா  C.டெனிசியா   D.யூரோஸ்பேஸ்

சரியான விடை:A

19. இந்தியாவிலேயே முதல்முறையாக பசுமை ஐடெரின்(Green Hydrogen)எரிபொருளில் இயங்கும் பேருந்து எந்தநகரத்தில் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது

A.டெல்லி  B.நாக்பூர் C.கொல்கத்தா D.மும்பை

சரியான விடை:A

20. சூரியனை ஆய்வு செய்ய பார்க்கர் என்ற சூரிய ஆய்வு காலத்தை விண்வெளிக்கு அனுப்பி உள்ள நாடு எது?

   A.சீனா  B.ரஷ்யா C.ஜப்பான் D.அமெரிக்க ஐக்கிய நாடு

சரியான விடை:D

21. ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கின் மூலம் ——— என்ற வியாழன் கோளின் துணைக்கோளில் கார்பன் டை ஆக்சைடு வாயு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.?

A. கனிமேடு         B.கேல்ஸ்டோ      C.யுரோப்பா        D.கார்மீ

சரியான விடை:C

22.ICMR சமீபத்தில் கண்டுபிடித்துள்ள ஆண்களுக்கான கருத்தடை ஊசியின்  பெயர் என்ன.?

A.RISUG  B.RESUG C.MESUG  D.RIMEG.

சரியான விடை:A

கூடுதல் தகவல்கள்:RISUG Reversible inhibition of sperm under guidance

23. சந்திராயன் மூன்று விண்வெளி களம் எந்த தேதியில் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியது.

A.ஆகஸ்ட்1.2023.  B.ஆகஸ்ட் 23 2023.  C.ஆகஸ்ட் 30.2023.  D.மேற்கண்ட எதுவும் இல்லை

சரியான விடை:B

24. டாக்கார்(Daker Ddeclaration) பிரகடனம் 2023 எதனோடு தொடர்புடையது

A.உலகில் பரவி வரும் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்புடையது

B.உலக அளவில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுப்பது தொடர்புடையது

C.பருவநிலை மாற்றம் தொடர்புடையது

D.வளர்ந்து வரும் நாடுகளுக்கு பொருளாதார உதவி அளிப்பது தொடர்புடையது

சரியான விடை:C

25. சுதந்திரத்திற்குப் பின்பு ஜாதிவாரி கணக்கெடுப்பினை மேற்கொண்டமுதல்  மாநிலம் எது?

A.தமிழ்நாடு          B.ராஜஸ்தான்     C.மத்திய பிரதேஷ்      D.பிகார்

சரியான விடை:D

26.2022 ஆம் ஆண்டுக்கான சரஸ்வதி  சம்மான் விருது யாருக்கு வழங்கப்பட்டது.

A. அம்பை B.மு.ராஜேந்திரன் C.தேவிபாரதி. D.சிவசங்கரி.

  சரியான விடை:D

கூடுதல் தகவல்கள்:

சிவசங்கரி .இப்பரிசு சூரியவம்சம் என்ற நினைவுப் புத்தகத்திற்காக வழங்கப்பட்டது. 

அம்பை 2021 ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருதை சிவப்பு கழுத்துடன் ஒரு பச்சை பறவை என்ற சிறுகதை நூலுக்காக பெற்றார். தமிழில் நான்காவதாக  சாகித்திய அகாடமி விருதை பெரும் பெண் எழுத்தாளராக   அம்பை உள்ளார் முதன் முதலில் தமிழில் சாகித்து அகாடமி விருது பெற்ற பெண் எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் அவரைத் தொடர்ந்து லட்சுமி திலகவதி ஆகியோர் இந்த விருதை ஏற்கனவே பெற்றுள்ள பெண் எழுத்தாளர்கள் ஆவார்

மு. ராஜேந்திரன் 2022 ஆம் ஆண்டுக்கான சாகித் அகாடமி விருதை காலா பாணி என்ற நாவலுக்காக பெற்றார்.

தேவிபாரதி . 2023 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர் தேவிபாரதி . இவர் நீர் வழிப்ப டூவும்  என்ற நாவலுக்காக இந்த விருதை பெறுகிறார் இவர் இயற்பெயர் ராஜசேகரன்.

27.சாகித்ய அகாடமி பெற்ற முதல் தமிழ் எழுத்தாளர் யார்.

A. கல்கி கிருஷ்ண மூர்த்தி. B.ரா பி சேதுப்பிள்ளை

C.மு வரதராஜன்.D.கீ வா ஜெகன்நாதன்.

சரியான விடைB-

ரா பி சேதுப்பிள்ளை -நூல் தமிழ் இன்பம் 1955 ஆம் ஆண்டு இந்த விருதை பெறுகிறார்..

28.2023 ஆம் ஆண்டுக்கான உலக ஆசிரியர்  பரிசை பெறுபவர் யார்.

  1. தீப் நாராயணன் நாயக்.                   
  2. எஸ் எஸ் மாலதி 
  3. C.காட்வின் வேதநாயகம் ராஜ்குமார்.
  4. D.மேற்கண்ட யாவரும் இல்லை

சரியான விடை A

கூடுதல் தகவல்கள்:மேற்கு வங்கத்தை சேர்ந்த இவர்  கோவிட் பெருந்தொற்று காலத்தில் மாணவர்களை தெருக்களில் அமர வைத்து பாடம் சொல்லித் தந்தவர்.ஆதிவாசி குடும்பத்தை சேர்ந்த இவருக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் பரிசாக வழங்கப்படுகிறது இந்த போட்டியில் 13 நாடுகளை சேர்ந்த ஆசிரியர்கள் கலந்து கொண்டார்கள் இதில் இவர் வெற்றி பெற்றுள்ளார்.

 எஸ் எஸ் மாலதி,காட்வின் வேதநாயகம் ராஜ்குமார்.இவர்கள் இருவரும் 2023 ஆம் ஆண்டுக்கான தேசிய  அளவில்சிறந்த ஆசிரியை, ஆசிரியர்கள் விருது  பெற்றவர்கள்.

29. 2023 ஆம் ஆண்டுக்கான 19th ஆசிய விளையாட்டுப் போட்டிகளை எந்த  நாடு நடத்தியது.

A. ஜப்பான்  B.சீனா   C.இந்தோனேசியா   D.இந்தியா

சரியான விடை :B

30. 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற 19th ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா எத்தனை பதக்கங்களை வென்றது.

A.100.    B.105.    C.98.     D.107

சரியான விடை: D

கூடுதல் தகவல்கள்:107 (28 தங்கம் 38 வெள்ளி 41 வெண்கலம்)

31. 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில்  பதக்கங்களை பெறுவதில் இந்தியா எத்தனையாவது இடத்தை பெற்றுள்ளது.

 A மூன்றாவது B நான்காவது C ஐந்தாவது D இரண்டாவது

 சரியான விடை: B நான்காவது.

கூடுதல் தகவல்கள்:முதல் மூன்று இடங்களை முறையே சீனா ஜப்பான்   கொரியாகுடியரசு ஆகிய நாடுகள் பெற்றன.

32. 2023 ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தொடர்பாக  சரியானவற்றைதேர்வு செய்.

1. ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் அணி இரண்டும் முதல் பங்கேற்பில் தங்கள் முதல் தங்கத்தை வென்றன.

2. இந்திய மகளிர் கபடி அணி சீனா  அணியை வீழ்த்தி தங்கம்  வென்றது.

3 நீச்சல் போட்டியில் தான் இந்தியா அதிகமான தங்கங்களை வென்றது.

A. ஒன்று மட்டும் சரி B.ஒன்று இரண்டு மட்டும் சரி.C.மூன்று மட்டும் சரி. D.அனைத்தும் சரி.

 சரியான விடை:B

கூடுதல் தகவல்கள்:இந்தியா துப்பாக்கி சுடுதலில் தான் அதிகமான(9) தங்கங்களை வென்றது. நீச்சல் போட்டி ஆறு தங்கங்களை வென்று இரண்டாவது இடத்தில்  உள்ளது.

33. உலக ஆசிரியர் தினம் ………..அன்று கொண்டாடப்படுகிறது.

A.அக்டோபர் 5 B.செப்டம்பர் 5 ,C.அக்டோபர் 15,D.அக்டோபர் 16

 சரியான விடை A.

கூடுதல் தகவல்கள்:

செப்டம்பர் 5 இந்தியாவில் ஆசிரியர் தினம்.

அக்டோபர் 15 உலகமாணவர் தினம்.அப்துல் கலாம் பிறந்த நாள்.

அக்டோபர் 16உலக உணவு தினம்.

34. பொருத்துக.

1. 2023 மருத்துவத்திற்கான நோபல் பரிசு.-a.Ruixiang Zhang.

2.2023இயற்பியலுக்கானநோபல்பரிசு.b.கட்டலின் கரிக்கு, மற்றும் ட்ரூ வெயிய்ஸ்மேன்.

3. 2023 வேதியலுக்கான நோபல் பரிசு.c.Moungi G Bawendi,Louis E Brusand and Alexi I Ekimov.

4. 2023.சாஸ்த்ரா ராமானுஜன் பரிசு.d. pierre agostine,Ferenc krauszand Anne L huillier.

A.1b,     2c,      3d,     4a.

B.1a,     2c,    3d,      4b.

C.1a,   2b,    3c,      4d.

D.1b,   2d,   3c,       4a.

 விடை:D

35. கீழ்க்கண்டவற்றில் எந்த  எந்த எந்தவிருதுகளை எம் எஸ் சுவாமிநாதன் பெற்றுள்ளார்.

1.பத்மஸ்ரீ பத்மபூஷன் பத்மவிபூஷன்.

2. உலக உணவு பரிசு.

3. ரைட் லவ்லி ஹுட் பரிசு(Right livelihood price).

4. ராமன் மேகசசி  விருது  மற்றும் ஐன்ஸ்டீன் உலக அறிவியல் விருது.

A. அனைத்தும் சரி. B. 1,2   மற்றும் 3 மட்டும் சரி C. 1,2,  மற்றும்4 மட்டும் சரி. D. 1.மற்றும் 4 மட்டும் சரி.

 விடை:C.

36. 2023 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு யாருக்கு வழங்கப்பட்டது.

A. நர்கஸ்  முகமது.  B.அலெக்சி எஸ்கிமோC.வின் மேன் D.மேற்கண்ட எவருமில்லை

விடை:A

37. சமீபத்தில் தமிழக முதல்வர்  9 அறிவியல் அறிஞர்களுக்கு ஊக்கத் தொகையாக வழங்கிய தொகை எவ்வளவு.

A. 10 லட்சம்   B. 50 லட்சம C. 25 லட்சம்   D. ஒரு கோடி .

சரியான விடை:c.

38.  சரியான இணையைத் தேர்வு செய்க.

1. இஸ்ரோ தலைவர்-  டாக்டர் எஸ் சோமநாத்.

 2.சந்திராயன்1மற்றும்2 திட்டஇயக்குனர்-மயில்சாமிஅண்ணாதுரை.

3  சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையம்-  பி. வீரமுத்து.

4 சந்திராயன் 3  திட்ட இயக்குனர் -ஏ ராஜாராம்

A.1,2  சரி.                 B.1,3  சரி.                 C.2,3  சரி.     D.அனைத்தும் சரி.

 சரியான விடை:A.

கூடுதல் தகவல்கள்:சதீஷ் தவான் ஆராய்ச்சி மையத் தலைவர் ஏ ராஜாராம். சந்திராயன் 3  திட்ட இயக்குனர் வீரமுத்து

39. பெண்களை மையமாக வைத்து உத்தர் காண்டு மாநிலத்தில்  செயல்படுத்தப்படும் பசிப்போக்கும் திட்டம்(Hunger project) என்ற   திட்டத்திற்கு எந்த நாடு நிதி உதவி அளிக்கிறது.

A. சுவிட்சர்லாந்து  B.நார்வே   C.அங்கேரி     D.டென்மார்க்.

  சரியான விடை:B

40. இந்தியாவிலேயே முதல்முறையாக 3D தொழில் நுட்பத்தை  பயன்படுத்தி ஒரு கட்டடம் கட்டப்பட்டுள்ளது. அதன் பெயர்   என்ன.

A.kesnik. B.Amaze-28,  C Tvasta   D -D tech.

 சரியான விடை:B

41. 2023 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு யாருக்கு  வழங்கப்பட்டது.   

A.jon fosse   B Nages mohammadi C.Claudia goldin    D. மேற்கண்ட யாவரும் இல்லை.

 சரியான விடை: A.

42. பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு 2023 ஆம் ஆண்டுக்கு யாருக்கு வழங்கப்பட்டது

A.jon fosse. B.Nages mohammadi.  C.Claudia goldin  D.Agostine.

 சரியான விடை:C

43. செவித்திறன் குறைபாடு உடைய முதல் இந்திய வழக்கறிஞர் யார்.

A. சாரா லியோனி  B. சஞ்சய் குமார்  C.ஜெயசுதா D. சாரா சன்னி

 சரியான விடை:D

44. நீலகிரி மலையில்    வரையாடுகள்கணக்கெடுப்பை  மேற்கொண்டுவரையாடுகளைப் பற்றி ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியவர் யார்   

A.சலீம் அலி  B.தேவிதார்  C. எம்எஸ்சுவாமிநாதன் D.மேற்கண்ட யாவரும் இல்லை

சரியான விடை:B

45. பொருத்துக.

1.இந்தியாவின் வன  மனிதர்( Forest man of india)-a. ஜாதவ் பேயாங்க்

2.இந்தியாவின் தண்ணீர் மனிதர் (water man of india)-b. சலீம் அலி

 3.இந்தியாவின் பறவை மனிதர்(Bird man of india) –c. ராஜேந்திர சிங்

 4.இந்தியாவின் மரம் மனிதர்(Tree man of india)-d. மாரிமுத்து யோகநாதன்.

A.1a,     2c,        3b,   4d

B.1a,    2b,      3c,     4d.

C.1a,   2b,   3d,       4c.

D.1b,   2a,   3c,    4a.

 சரியான விடை A

கூடுதல் தகவல்கள்:

 ஜாதவ்  பேயாங்க். அசாம் மாநிலத்தை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர்  பிரம்மபுத்திரா நதிக்கரைகளில் மரங்களை நட்டு 1360 ஏக்கர் பரப்பளவில் ஒரு புதிய காட்டை உருவாக்கியுள்ளார்.

சலீம் அலி பறவைகள் ஆர்வலர்   பரத் பூர் பறவைகள் சரணாலயத்தை உருவாக்கியதில் முக்கிய பங்கு ஆற்றியவர்.  

ராஜேந்திர சிங்  இவர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் மக்களை ஈடுபடுத்தி நீர் மேலாண்மை திட்டங்களை உருவாக்குவதில் மிக முக்கியமானவர் 2021 ஆம் ஆண்டு இவருக்கு ராமன் மேகசீசை விருது வழங்கப்பட்டது

மாரிமுத்து யோகநாதன் இவர் தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு சாதாரண போக்குவரத்து கண்டக்டர் மாநிலம் முழுவதும் ஒரு லட்சத்து 20 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டார் இவருடைய திட்டத்தின் பெயர் உயிர் வாழ ஒரு மரம் குடியரசு தலைவரால் இவருக்கு எக்கோ வாரியர் என்ற விருது வழங்கப்பட்டது.

46. மத்திய அரசாங்கத்தின் அப்னா சந்திராயன்  என்பது   என்ன

 A.இந்தியாவில் விண்வெளி ஆராய்ச்சிகளைப் பற்றிய  தகவல்களை தருகின்ற இணைய தளம்

B.பெண்களுக்கு அரசாங்கத்தால் அளிக்கப்படுகின்ற திட்டங்களின் விவரங்களை தருகின்ற இணையதளம்

C.மாணவர்களுக்கு வினாடி வினா புதிர்களை தருகின்ற கல்வி தொடர்பான இணையதளம்

  D.மேற்கண்ட எதுவும் இல்லை

சரியான விடை C.

47.PM SVANidhi என்பது என்ன.

A.புனிதப் பயணம் மேற்கொள்பவர்களுக்கு நிதி உதவி அளிக்கும்  திட்டம்

B.தெரு வோர  வியாபாரிகளுக்கு சிறு  கடன்அளிக்கும் திட்டம்

C.அனைத்து கிராமங்களுக்கும் இணைய வசதியை அளிக்கும் திட்டம்

D.மூன்றாம் பாலினத்தவர்களுக்கு நிதி உதவி  வழங்கும் திட்டம்

சரியான விடை B.

48 நாகோர்னோ- காராபாக்  பிரச்சனை எந்த நாடுடன் தொடர்புடையது .

A.  அஜார்பைஜான்  B.உக்ரைன்  C.பாலஸ்தீனம்   D.சூடான்

சரியான விடை A

49. ரசாயனங்கள் மற்றும் அதன் கழிவுகளால் ஏற்படும் சுற்றுச்சூழல்அபாயங்களை குறைப்பதற்கான முக்கியமான உச்சி மாநாடு எந்த   நகரில் நடைபெற்றது.

A.பாரிஸ்                B.ஜெனிவா           C.பான்                     D,பெர்லின்

சரியான விடை: C

கூடுதல் தகவல்கள்:ஜெர்மன் நாட்டில் உள்ள பான் மாநகரில் இந்த மாநாடு நடைபெற்றது  2035 ஆம் ஆண்டுக்குள் தீங்கு விளைவிக்கும் வகையிலான வேளாண் பூச்சிக்கொல்லிகளின் பயன்பாட்டினை படிப்படியாக குறைப்பது இந்த கூட்டமைப்பின் நோக்கமாக இருக்கிறது.

50. எந்த தேதி சர்வதேச வறுமை ஒழிப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது .

A.அக்டோபர் 17 B.அக்டோபர் 15 C.அக்டோபர் 10. D.அக்டோபர் 6

சரியான விடை A

கூடுதல் தகவல்க B. உலக கை கழுவுதல் தினம், சர்வதேச கிராமப்புற பெண்கள்   தினம் உலகப் பார்வையற்றோர் கைத்தடி தினம் உலக மாணவ

C மரண தண்டனைக்கு எதிரான உலக தினம்.

 D உலக புன்னகை தினம்

1 thought on “TNPSC October 2023 Current Affairs in Tamil”

  1. Sir questions are very standard and quality. Very useful for tnpsc preparation. Please try to questions like this for every month.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Home
Call
Mail
error: Content is protected !!