TNPSC Exam நடப்புசெய்திகள் – நவம்பர் 2023

நவம்பர்மாதத்தில் (2023) தமிழ்நாடு, இந்தியா மற்றும் பன்னாட்டுஅளவில்நடைபெற்றநிகழ்வுகளை தொகுத்துதேர்வு நோக்கில் கொள் குறி வகையில்(MCQ) இதில் வழங்கி உள்ளோம்.எந்த ஒரு முக்கிய நிகழ்வும் விடுபடாமல் இருக்கும் வண்ணம் மிகுந்த கவனத்துடன் வினா விடைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.விடையில் உள்ள ஒவ்வொரு “Option”க்கும் தேவையான இடங்களில் விரிவான விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளன.(தேர்வர்கள் இதை அப்படியே படிக்காமல்  குறிப்பு எடுத்து (notes-hinds) படிக்க வேண்டியது மிகவும் அவசியம்)

1.உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு (AI security summit)பாதுகாப்பு உச்சி மாநாடு எந்த நாட்டில் நடைபெற்றது.

A.அமெரிக்காஐக்கியநாடு B.இங்கிலாந்து C.சீனா D.பிரான்ஸ்

விடை:B.

கூடுதல் தகவல்கள்: இங்கு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு பிளெட்ச்லி (Bletchley declaration)பிரகடனம் என்று பெயர். இதில் அமெரிக்கா,சீனா,இந்தியா,ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட 27 நாடுகள் கையெழுத்து விட்டன.

2. கண்டத் திட்டு நகர்வு காரணமாக  ஆஸ்திரேலியாவில் இருந்து பிரிந்து தென்கிழக்கு ஆசியாவை நோக்கி  சென்று துண்டு துண்டாக உடைந்து  போய் உள்ள கண்டத்திற்கு என்ன பெயர்.

A.ஆஸ்ரிலேண்ட்.B. தேமிலேண்ட்

.C ஆர்கோலாந்து. D.மேற்கண்ட எதுவும் இல்லை.

விடை:C.

3. தன் பாலின திருமணத்தை அங்கீகரித்த முதல் நாடு உலகத்தில் எது.

A நெதர்லாந்து B.தாய்லாந்து C.நேபாளம் D.தைவான்.

விடை:A

கூடுதல் தகவல்கள் மற்றவை அனைத்தும் தன்பாலின திருமணத்தை அங்கீகரித்த நாடுகள் சமீபத்தில் இதனை அங்கீகரித்த நாடு தாய்லாந்து. இந்தியாவில் இத்தகைய திருமணத்திற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளது.

4.உலகின் எட்டாவது அதிசயமாக தற்போது புதிதாக ………..  சேர்க்கப்பட்டுள்ளது.

A. இத்தாலியின்  பொம்பெயி B. தாஜ்மஹால்.

C. கர்நாடகாவில் உள்ள ஹம்பி.D.அங்கோர் வாட்.

விடை:D.

5. செயற்கை மழையை கொண்டு வருவதற்கான  மேக விதைப்பிற்கு பயன்படுத்தப்படும் வேதி பொருள் என்ன.

1 சில்வர் அயோடைடு.

2.கால்சியம் குளோரைடு  சுடர்கள்.

3. பொட்டாசியம்  அயோடைடு.

A.1 மட்டும் சரி.B.2,3 மட்டும் சரி.

C.1,3  மட்டும் சரி. D. அனைத்தும் சரி.


விடை:D.

6.CAIPEEX(cloud Aerosol Interaction and precipitation Enhancement Experiment )Phase 4 எனப்படும் செயற்கை மழை மேகவிதைப்பு (cloud seeding)பரிசோதனை சமீபத்தில் எந்த ஊரில் நடத்தப்பட்டது.

A. ஜெய்ப்பூர். B. நாக்பூர்.

C. சோலாப்பூர்.D. உதயப்பூர்.

விடை:C.

7. சூரிய ஒளியை வெப்ப ஆற்றலாக மாற்றக்கூடிய கார்பன்  நுண்கதிர்கள்(carbon nanoflorets) …………………என்ற அமைப்பால் உருவாக்கப்பட்டுள்ளது.

A.இந்திய தொழில்நுட்பக் கழகம் மும்பை.

B.இந்திய தொழில்நுட்ப கழகம் சென்னை.

C.இந்திய தொழில்நுட்பக் கழகம் கான்பூர்.

D.இந்திய தொழில்நுட்பக் கழகம் கொல்கட்டா .


விடை:A

8.  குஷா(KUSHA)திட்டம் எதனோடு தொடர்புடையது.

A. இந்தியாவின் வடமேற்கு பகுதியில் ஆட்சி செய்த குஷானர்களின் வரலாற்றை மீட்டெடுப்பது தொடர்பானது.

B தகவல் தொடர்பு திட்டம் தொடர்பானது.

C. ஏவுகணைகள் ரேடாருக்கு புலப்படாத போர் விமானங்கள் ஆளில்லா விமானங்கள் ஆகியவற்றை கண்டு அழிக்கும் திறன் கொண்ட பாதுகாப்பு ஏவுகணை.

D. ஆழ்கடல் ஆராய்ச்சி தொடர்புடைய ஒரு திட்டம்.

விடை:C

கூடுதல் தகவல்கள்: இந்த ஏவுகணைகள் 150 கிலோமீட்டர் 200 கிலோமீட்டர் மற்றும் 350 கிலோமீட்டர் என்ற தூரத்தில் உள்ள எதிர் நாட்டு இலக்குகளை கண்டறிந்து தாக்குதல் நடத்தும் திறன் கொண்டது.

9.நாடுகளின் பெயர்களும் அந்த நாடுகளால் பயன்படுத்தப்படும் எதிரி நாட்டு இலக்குகளை கண்டறிந்து தாக்கும் ஏவுகணை பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளன. இதில்சரியான இணையை தேர்வு செய்க.
1. இஸ்ரேல்- இரும்பு கவச அமைப்பு(Iron Dome system).
2.அமெரிக்க ஐக்கிய நாடு.- பேட்ரியாட்.
3.ரஷ்யா-S400.
4.ஜப்பான்-SQ-9.


A.1,2மட்டும்சரி
B.2,3மட்டும்சரி
C.1,2,3மட்டும்சரி
D.அனைத்தும்சரி.

விடை:C

கூடுதல் தகவல்கள்:SQ9 என்பது சீன நாட்டு ஏவுகணை.

10. பெரலாய்(Pralay) என்பது என்ன.

A.குறுகிய தூரம் தாக்கக்கூடிய ஏவுகணை.

B. நீண்ட தூரம் தாக்கக்கூடிய ஏவுகணை.

C. இந்தியாவினால் புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள போர்க்கப்பல்.

D. மேற்கண்ட எதுவும் இல்லை.

விடை:A.

11. ப்ளூ வாக்கர் செயற்கைக்கோள் யாரால் விண்ணில் செலுத்தப்பட்டது.

A.சீனா. B.AST space mobile.

C.ரஷ்யா. D.ஐரோப்பிய யூனியன் யூனியன்.

விடை:B.

கூடுதல்தகவல்கள்:
இது செப்டம்பர் 10 2022 அன்று  ஸ்பேஸ் மொபைல் என்ற அமெரிக்க நாட்டு கம்பெனியால்  விண்ணில்செலுத்தப்பட்டது.It is the largest-ever commercial communications array deployed in low-Earth orbit and is designed to communicate directly with cellular devices via 3GPP standard frequencies at 5G speeds.

12. சூரியனை விட மில்லியன் பில்லியன் பில்லியன் மடங்கு பிரகாசம் கொண்ட உலகின் மிகவும் சக்தி வாய்ந்த லேசர் அமைப்பை இங்கிலாந்து நாடு உருவாக்கி உள்ளது அதன் பெயர் என்ன.

A:வல்கன் 20-20. B:லேகன் 20-22

C:முசார் -1 D:எலிவேட்டர்-4.

விடை:A

13.CALIPSO science mission (Cloud Aerosol lidar and Infrared pathfinder Satellite Obervaion)என்ற அறிவியல் ஆய்வு  களத்தின் நோக்கம் என்ன.

A.அண்டார்டிகா பகுதியில் வானிலை மாற்றத்தை ஆய்வு செய்தல்.

B. தொலைத்தொடர்பு ஆய்வுக் கலன்.

C.பருவநிலை வானிலை மற்றும் காற்றின் தரத்தை ஆய்வு செய்தல்.

D. மேற்கண்ட எதுவும் இல்லை.

விடை:C

கூடுதல் தகவல்கள்: நாசா மற்றும் பிரான்ஸ் நாட்டின் CNES  அமைப்பு ஆகியவற்றால் cloudsat  என்ற செயற்கைக்கோளில் அனுப்பப்பட்டு கடந்த 17 ஆண்டுகளாக ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தது அதன் பணி தற்போது முடிவுற்று உள்ளது.

14.IISR  Chandra என்பது என்ன

A.புதிதாக கண்டறியப்பட்டுள்ளஅதிக விளைச்சல் தரும் கருப்பு மிளகு ரகம்.

B.புதிதாகக் கண்டறியப்பட்டுள்ள அதிக விளைச்சல் தரும் ஏலக்காய் ரகம்.

C.புதிதாக கண்டறியப்பட்டுள்ளஅதிக விளைச்சல் தரும் இஞ்சிரகம்

D.அதிக விளைச்சல் தரும் தனியா ரகம்.

விடை:A.

கூடுதல் தகவல்கள்: IISR-Indian institute of spices research.Kozhikode.

15. பால்வழி அண்டத்திற்கு அப்பாலில் இருந்து வந்த துகள் ஒன்றை கண்டுபிடித்து அதற்கு  சூரிய கடவுள் என்று பொருள்படக்கூடியஅமதேரசு(Amaterasu) என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த அரிய வகை துகளை எந்த நாடு கண்டுபிடித்தது.

A. இந்தியா. B. சீனா.

C. இஸ்ரேல். D ஜப்பான்.

விடை:D.

16. சர்வதேச விண்வெளி  நிலையம்(International space station) கீழ்க்கண்ட நாடுகளால் அமைக்கப்பட்டுள்ளது இதில் எந்த நாடு இடம் பெறவில்லை .

அமெரிக்க ஐக்கிய நாடு, .ரஷ்யா, ஐரோப்பா, ஜப்பான், கனடா. சீனா.

A. சீனா. B.கனடா.

C.ரஷ்யா. D.ஜப்பான்.

விடை:A.

கூடுதல் தகவல்கள் :இந்த விண்வெளி நிலையம் நவம்பர் 20 1998 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது 2024 ஆம் ஆண்டு ரஷ்யா இந்த திட்டத்தில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளது.

17.உலக சைவ தினம் எந்த தினத்தில் கொண்டாடப்படுகிறது.

A.நவம்பர்1. B.நவம்பர்2

C.நவம்பர் 4 D.நவம்பர் 12

விடை:A

18. உலகத்திலேயே நீண்ட காலம் ஒரு அரசாங்கத்தின் தலைவராக இருந்த பெண் தலைவர் யார்.

A. திருமதி இந்திரா காந்தி.B.  சிரிமா பண்டாரநாயக்கா.

C. மார்கெட்  தாட்ச்சர். D ஷேக் அசினா.

விடை:D.

கூடுதல் தகவல்கள்:இவர் வங்கதேசத்தில் 19 ஆண்டுகள் பெண் தலைவராக பதவி வகித்தார்.

19.ஹிரலால் சமரியா என்பவர் சமீபத்தில் ஏன்  செய்திகளில் இடம் பிடித்தார்.

A.இந்திய மனித உரிமை ஆணையத்தின் தலைவர்.

B.இந்திய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர்.

C. மத்திய தகவல் ஆணையத்தின் தலைவர்.

D.இந்தியதாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர்.

விடை:C

20. ஒரே விண்வெளி பயணத்தின் மூலம் நீண்ட நாட்கள் விண்வெளியில் தங்கி இருந்து சாதனை படைத்தவரின் பெயர்  என்ன.

A.வேலன்டினா தெரஸ்கோவா.B.பஸ்ஸ் ஆல்ரின்.

C.பிராங்க்  ரூபியோ.D. மேற்கண்ட யாவரும் இல்லை.

விடை:C.

கூடுதல் தகவல்கள்:

தெரஸ்கோவா விண்வெளியில் பயணம் செய்த முதல் பெண்மணி இவர் சோவித் ரஷ்ய நாட்டை சேர்ந்தவர்.பஸ்ஸ் ஆல்ரின்  நிலவில் காலடி வைத்த இருவர்களில் இவரும் ஒருவர் நீல் ஆம்ஸ்ட்ராங் உடன் அப்போலோ விண்கலத்தில் நிலவுக்கு சென்ற இவர்  நீல் ஆர்ம்ஸ்ட்ராங் நிலவில் கால் வைத்த பிறகு 20 நிமிடங்கள் கழித்து இவர் நிலவில் கால் வைத்த காரணத்தினால் நீல் ஆம்ஸ்ட்ராங்கை போல இவர் புகழ் பெறவில்லை.பிராங்க்  ரூபியோ  371 நாட்கள் விண்வெளியில் தங்கி இருந்து சாதனை படைத்து பூமிக்கு திரும்பினார்.

21. இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி தொடர்பாக சரியானவற்றை தேர்ந்தெடுக்கவும்.

1. ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் அதிக சதங்கள் அடித்த சர்வதேச கிரிக்கெட் வீரர்.

2. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் அதிக ரன் எடுத்த வீரர்.

3.அர்ஜுனா விருது பெற்றவர்.

A.1 மட்டும் சரி B 1 2  மட்டும் சரி.

C. அனைத்தும் சரி. D. அனைத்தும் தவறு.

விடை:C.

கூடுதல் தகவல்கள்: ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 50 சதங்கள் அடித்து சச்சின் டெண்டுல்கரை விட இவர் அதிக இடத்தில் இருக்கிறார். உலகக்கோப்பை  கிரிக்கெட் போட்டி தொடரில் அதிக ரன்கள்  674 ரன்கள் எடுத்த வீரர் இவர். இவருக்கு 2013ஆம் ஆண்டு அர்ஜுனா விருது வழங்கப்பட்டது.

22. சமீபத்தில் இயற்கை எழுதிய டாக்டர் எஸ் எஸ் பத்ரிநாத் என்பவர் எந்த துறையை சேர்ந்தவர்

A.கண் மருத்துவர் . B.நரம்பியல் நிபுணர்.

C.இதயமாற்று அறுவை சிகிச்சை நிபுணர்.D.இந்திய மருத்துவ சங்கத்தின் தலைவர்.

விடை:A.

கூடுதல் தகவல்:சங்கரா நேத்ராலயா நிறுவனத்தின் தலைவர்.

23. சமீபத்தில் இயற்கை எழுதிய பொன்னுசாமி என்பவர் எந்த துறை வல்லுனர்.

A வில்லுப்பாட்டு கலைஞர்.B. நாதஸ்வரக் கலைஞர் .

C.மிருதங்க வித்வான். D. வாய்ப்பாட்டு கலைஞர்.

விடைB

கூடுதல் தகவல்:நாதஸ்வரத்தை அடிப்படையாகக் கொண்ட தில்லானா மோகனாம்பாள் என்ற படத்தில் இவர் நாதஸ்வரம் வாசித்தார்.

24. நீதிபதி சந்துரு அவர்களின் தலைமையில் ஒரு நபர் குழு  எதற்காக அமைக்கப்பட்டது.

A.மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் தொடர்பாக.

B.ஒரே பாலின திருமணம் தொடர்பாக.

C.சிறார் கூர்நோக்கு இல்லங்கள் சிறப்பு இல்லங்கள் மற்றும் பாதுகாப்பு இல்லங்களில் நிலைமையை ஆராய்வதற்காக.

D. தமிழ்நாட்டில்சாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்வது தொடர்பாக பரிந்துரை வழங்க.

விடை:C.

25. சரியாகப் பொருத்துக.
1.
ENCORE.    a.வாக்காளர்களின் பெயர்களை  வாக்காளர் பட்டியலில் சேர்த்தல்அடையாள அட்டை

பெறுதல் போன்ற வாக்காளர்களின் சேவை தொடர்பான ஒரு  போர்டல்.
2.cVIGIL.      b.வேட்பாளர் மற்றும் தேர்தல் மேலாண்மைக்கான உள் அமைப்பு மென்பொருள்
3.Sakshan.  c. தேர்தல் விதி மீறல்கள் தொடர்பாக புகார்களை  அளிப்பதற்கான ஒரு  செயலி.
4.NVSP. d.தேர்தல் ஆணையத்தால் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள

வசதிகளையும் ஏற்பாடுகளையும் அறிந்து கொள்வதற்கான ஒரு செயலி.


A. 1b  2c  3a  4d
B. 1b  2c  3d  4a.
C. 1a  2c  3d  4b
D. 1b 2c  3d 4a.

விடை.D.

26. காற்றாலை மின் உற்பத்தியில் முன்னணி வகிக்கும் மாநிலம் எது.

A. குஜராத் B. மகாராஷ்டிரா

C. தமிழ்நாடு D.கேரளா

விடைC.

27.காற்றாலை  மின் உற்பத்தி திறன் பெற்றுள்ள மாநிலங்களை அதிகத்திலிருந்து குறைவாக வரிசைப்படுத்துக.

1.குஜராத். 2.மகாராஷ்டிரா.

3.தமிழ்நாடு. 4.கர்நாடகா.

A.  3,  2,  1,  4
B.  3,  1,  2,  4
C.  3,  4,  1,  2
D.  3,  1,  4,  2.

விடை:B.

28. சரியாகப்  பொருந்திஉள்ளவற்றை தேர்ந்தெடுக்கவும்.
1.பாரதிய நியாய சன்ஹிதா  மசோதா(BNS)2023-

இந்திய தண்டனைச் சட்டம் 1960.
2. பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா  மசோதா(BNSS)-2023

– குற்றவியல் நடைமுறைச் சட்டம்-1898.
3. பாரதிய சாட்சிய மசோதா(BS)-2023

– இந்திய சாட்சியச் சட்டம்-1872.

A.1 மட்டும் சரி
B1,2  மட்டும் சரி
C.1,3 மட்டும் சரி
D. அனைத்தும் சரி.

விடை D

29. அமினி என்ற பெயர் தொடர்பாக கீழ்க்கண்டவத்தில் சரியான வார்த்தை தேர்வு செய்க.
1. லட்சத்தீவு யூனியன் பிரதேசத்தின் தலைமையகத்தின் பெயர்
2. லட்சத்தீவில் உள்ள ஒரு சிறிய தீவின் பெயர்
3. அதிநவீன நீர்மூழ்கி எதிர்ப்பு போர்கப்பல்.

A.2 3 மட்டும் சரி
B .1 2 மட்டும் சரி
C.1 3 மட்டும் சரி
D அனைத்தும் சரி.

விடை:A.

30. 2023 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கால்நடை  கணக்கெடுப்பு புள்ளி விவரங்களின்படி

முறையே பால் உற்பத்தி மற்றும் இறைச்சி உற்பத்தியில் முன்னணி வகிக்கும் மாநிலம் எது.

A. உத்திரபிரதேசம் மற்றும் மத்திய பிரதேசம்.

B. உத்திரபிரதேசம் மற்றும் உத்தர பிரதேசம்.

C.குஜராத் மற்றும் உத்தர பிரதேசம்.

D. தமிழ்நாடு மற்றும் உத்திர பிரதேசம்

விடை:B.

31. சூழலியல் அச்சுறுத்தல் அறிக்கை-2023 படி உலகத்தில் எத்தனை நாடுகள்  கடுமையானஉணவு பாதுகாப்பு இன்மை என்ற பிரச்சினையை எதிர்கொள்ள உள்ளன. 

A 20  B 15     C 55     D 42.

விடை D

32. உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு வெளியிட்டுள்ள உணவு மற்றும் வேளாண்மை நிலை அறிக்கை2023  படி உலக மக்கள் தொகையில் ———-சதவீத மக்கள் கடுமையான உணவு பாதுகாப்பு இன்மையை எதிர் கொண்டு உள்ளனர்.

A15     B2.4    C11.3 D12.6

விடைC.

33.உள்நாட்டு மீன் வளர்ப்பில் முன்னணி வகிக்கும் மாநிலம் எது

A உத்திரபிரதேசம் Bஆந்திர பிரதேசம்

Cமேற்கு வங்காளம் D குஜராத்.

விடைA .

34. சமீபத்தில் இயற்கை எய்திய கென்னத் மெட்டிங்லி  என்பவர் எந்த துறையோடு தொடர்புடையவர்

 A நாசாவின் விண்வெளி வீரர்

Bமெக்சிகோ நாட்டு சுற்றுச்சூழல் ஆர்வலர்

Cநோபல் பரிசு பெற்ற அறிவியல் அறிஞர்

D.ஹாலிவுட் நடிகர்

விடைA.

35.சரியான இணையை தேர்வு  செய்க. (சுற்றுச்சூழல் போராளிகள் விருது 2023(Eco warriors Awards) மற்றும் அதனை பெறுபவர்கள்)
1. வன பாதுகாப்பு(forest protection)- வாசு  கணுச்சியா
. 2. வனவிலங்கு காப்பாற்றுதல்(wild life conservation)- டாக்டர் மோகன் ராம்
3. வனவிலங்கு பாதுகாப்பு(wild life protection)- ரித்தீஷ் சரோத்யா.
4. வனத்தை காப்பதற்காக தொழில்நுட்பத்தை மிகச் சரியான முறையில் பயன்படுத்துதல்- பிஷ்  வஜித்  மிஸ்ரா
5. சமூக இணைப்புக்கான விருது- மில்லோ  தசார்.

A 123 மட்டும் சரி
B 234 மட்டும் சரி
C 145 மட்டும் சரி
D அனைத்தும் சரி.

விடைD.

36. 2021 ஆம் ஆண்டு தமிழக அரசின் தடைசால் தமிழர் விருதை பெற்றவர் யார்.
A நல்லக்கண்ணு B சங்கரயா
C முத்தரசன் D மேற்கண்ட யாவரும் இல்லை .

விடைB.

37. சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஒரே ஆட்டத்தில் ஏழு விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெறுபவர் யார்.

A. விராட் கோலி B ரோகித் சர்மா
C முகமது  ஷமி D ரவீந்திர ஜடேஜா

விடைC.

38 2023 ஆம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்றவர் யார்
Aஷெய்னிஸ் பலாசியோஸ். Bகரோலினா பிலாஸ்கா.
C அர் போனி கேப்ரியல் D நந்தினி குப்தா.

விடைA

 கூடுதல் தகவல்கள்
கரோலினா பிலாஸ்கா
இவர் 2022 ஆம் ஆண்டு மிஸ் வேர்ல்ட். அர் போனி கேப்ரியல் இவர் 2022 ஆம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகி நந்தினி குப்தா இவர் 2023 ஆம் ஆண்டுக்கான மிஸ் இந்தியா.

39. வித்யா பிள்ளை எந்த விளையாட்டு வீரர்

A செஸ் B மகளிர் கால் பந்து

Cடேபிள் டென்னிஸ் Dஸ்னூக்கர்.

விடை D

கூடுதல் தகவல்கள்:கத்தார்  நாட்டின் தோகா நகரில் நடைபெற்ற உலக சாம்பியன்ஸ் ஸ்னூக்கர் போட்டியில் உலக சாம்பியன் பட்டத்தை வென்றார்.

40. இந்தியாவில் காற்றாலைகள் அமைந்துள்ள இடங்களில் சரியானவற்றை தேர்வு செய்க

1 முப்பந்தல்- தமிழ்நாடு

2ஜெய்சால்மர் -ராஜஸ்தான்

3பிரம்மனவேல்- மகாராஷ்டிரா

A.1 மட்டும் சரி B.1 2 மட்டும் சரி
C.1 3 மட்டும் சரி D.அனைத்தும் சரி

விடை D.

41. உலகின் மிகப்பெரிய ஒற்றை தல சூரிய சக்தி மின் நிலையம் எந்த நாட்டில் அமைந்துள்ளது

A.ஈரான் B.எகிப்து

C.ஐக்கிய அரபு அமீரகம் D.கசகஸ்தான்.

விடைC

42 பொறியியல் துறையில் 2022 ஆம் ஆண்டிற்கான சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது யாருக்கு வழங்கப்பட்டது.

A.ரஜினிஸ் குமார். B.வீர தாஸ்

C.GAIL அமைப்பு D.மேற்கண்ட யாவரும் இல்லை.

விடைA

கூடுதல் தகவல்கள்
வீர தாஸ் சர்வதேச எம்மி விருதை வென்றவர்.

43. மாற்றுத்திறனாளிகளுக்கான ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2023 ல் இந்தியா எத்தனையாவது இடத்தை பெற்றது.

A. இரண்டாம் இடம் B.மூன்றாம் இடம்

C.நான்காம் இடம் D.ஐந்தாம் இடம்

விடைA.

44. மாற்றுத்திறனாளிகளுக்கான ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2023 ல் அதிக பதக்கங்களை வென்ற நாடு எது

A.ஜப்பான் B.தென்கொரியா

C.சீனா D.ஈரான்

விடைC.

45.2023 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில் தொடர் நாயகனாக அறிவிக்கப்பட்டவர் யார்

A.டிராவிஸ் ஹெட் B.விராட் கோலி

C.ரவீந்தர் ஜடதா D.முகமது  ஷமி.

விடைB

கூடுதல் தகவல்கள்:ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் ஆட்டநாயகன்.

46. பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் என்று  அனுசரிக்கப்படுகிறது

A.நவம்பர் 16 B.நவம்பர் 18

C.18நவம்பர்19. D.நவம்பர்.25

விடைD

கூடுதல் தகவல்கள்
நவம்பர் 16 சர்வதேச சகிப்புத்தன்மை தினம் ,தேசிய பத்திரிகை தினம் நவம்பர் 18 தேசிய இயற்கை மருத்துவ தினம் நவம்பர் 19 சர்வதேச ஆண்கள் தினம், தேசிய ஒருமைப்பாட்டு தினம் ,உலக கழிவறை தினம், மகளிர் தொழில் முனைவோர் தினம்.

47. குருநானக் பிறந்த தினம்—-

A.நவம்பர் 8. B.நவம்பர் 10

C.நவம்பர் 26 D.நவம்பர் 27

விடைA

கூடுதல் தகவல்கள்:November 10 World immunisation day,november 26 constitition day or law day, november 27 world tourism day.

 48 தேசிய ஆயுர்வேத தினம்————

A.நவம்பர் 14 B. நவம்பர் 10.

C.நவம்பர்18 D.நவம்பர்26

விடைB

கூடுதல் தகவல்கள்: November 14 Natinal children day,November 10 World immunisation day,November 18 world day for the prevention of and healing fromchild sexual exploitation ,abuse and violence ,November26 world sustainable transport day.

49 தேசிய கல்வி தினம்————

A.நவம்பர் 10  B.நவம்பர் 28

C.நவம்பர் 13 D.நவம்பர் 11

விடைD

50.உலக கருணை தினம்————–

A. நவம்பர்  1 B.நவம்பர் 2

C. நவம்பர் 13. D நவம்பர் 4

விடைC


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Home
Call
Mail
error: Content is protected !!