2023-ஆம் ஆண்டின்  நிகழ்வுகள் TNPSC EXAMS -2024 SAI IAS ACADEMIC CENTRE,Rayakottai Road,KRISHNAGIRI,CEL 9940755065,8122465065

1.தமிழகத்தைச் சேர்ந்த எந்த சாதி மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கான சட்ட மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேறியது

விடை: நரிக்குறவர்,குருவிக்காரர்கள்

2.மாணவர்களிடையே சாதி இனப் பிரிவுகள் இல்லாத நிலை உருவாக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து அரசுக்கு ஆலோசனை வழங்க யார் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது.

விடை: ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு

3.தேசிய தூய்மை பணி ஆணையத்தின் தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த யார் நியமிக்கப்பட்டுள்ளார்.

விடை: மா வெங்கடேசன்

4.தமிழகத்தில் முதல் வந்தே பாரத் ரயில் சேவை எந்த இரு நகரங்களுக்கு இடையே தொடங்கப்பட்டது

விடை: சென்னை கோவை

5.இந்த ஆண்டு எந்தப் பொருள்களுக்கு தமிழகத்தில் இருந்து புவிசார்  குறியீடு கிடைத்துள்ளது

விடை:

ராமநாதபுரம் மாவட்டம் குண்டு மிளகாய்

வேலூர் மாவட்டம் எளவம்பாடி முள்கத்திரிக்காய்

மணப்பாறை முறுக்கு

மானாமதுரை தேன்,

ஆத்தூர் வெற்றிலை

கம்பம் பன்னீர் திராட்சை

வீரமான்குடி செடி புட்டா சேலை

திருவண்ணாமலை ஜடேரி நாமக்கட்டி

கன்னியாகுமரி மட்டி வாழைப்பழம்.

6.தமிழக அரசு வழங்கும் தகைசால் தமிழர் விருதை இந்த ஆண்டு யாருக்கு வழங்கப்பட்டது

விடை: திராவிட கழக தலைவருக்கு வீரமணி

7.சென்னை வெள்ளப்பெருக்கு பேரிடர் தணிப்பு மேலாண்மைக்காக யார் தலைமையில் தமிழக அரசால் குழு அமைக்கப்பட்டது

விடை : திருப்புகழ்

8.சிறுவர் சீர்திருத்தப் பள்ளிகள் சிறப்பு இல்லங்கள் பாதுகாப்பு இல்லங்களில் செயல்பாடுகள் நிர்வாக திறன்களை மேம்படுத்த தமிழக அரசால் யார் தலைமையில் குழு அமைக்கப்பட்டது

விடை : முன்னாள் நீதிபதி கே சந்துரு.

9.நீதிபதி  சத்யநாராயணன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் எதற்காக அமைக்கப்பட்டது

விடை:புதுக்கோட்டை வேங்கை வயல் குடிநீர் தொட்டில் மனிதக் கழிவு  கலக்கப்பட்ட விவகாரத்தில் விசாரணை நடத்த  உயர் நீதிமன்றத்தால் குழு அமைக்கப்பட்டது.

10.பாதுகாக்கப்பட்ட தாவரங்களின் பட்டியலில் புதிதாக மத்திய வனத்துறையால் சேர்க்கப்பட்ட தாவரத்தின் பெயர் என்ன

விடை : நீலக்குறிஞ்சிப் பூ இது 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கக்கூடிய பூவாகும்

1.இந்தியாவின் 74 வது(2023) குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக யார் கலந்து கொண்டார்

விடை: எகிப்து அதிபர் அப்துல் ஃபட்டா எல் சி சி.

2.டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள  முகல் கார்டனுக்கு என்ன பெயர் சூட்டப்பட்டுள்ளது

விடை : அம்ரித் உத்தியான்

3.இந்த ஆண்டு நடைபெற்ற குடியரசு தின வாகன அணிவகுப்பில் எந்த மாநிலத்துடைய காட்சி வாகனம் முதல் பரிசு  பெற்றது

விடை : உத்தரகாண்ட்

4.எந்த நாட்டில் இருந்து 12 சிங்கம் புலிகள் கொண்டுவரப்பட்டு மத்திய பிரதேச உயிரியல் பூங்காவில் திறந்து விடப்பட்டன

விடை : தென்னாப்பிரிக்கா.

5.எந்த நகரத்தில் மெத்தனால் மூலம் இயக்கப்படும் முதல் பேருந்து தொடங்கப்பட்டது

விடை : பெங்களூரு.

6.எந்த மாநிலத்தில் அந்த மாநிலம் உருவான 60 ஆண்டுகளில் முதல் முறையாக பெண்கள் சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்

விடை : நாகாலாந்து. 

7.ஆற்றுக்கு அடியில் சென்ற முதல் மெட்ரோ ரயில் என்ற பெருமையை எந்த மெட்ரோ பெற்றது

விடை : கொல்கத்தா மெட்ரோ ஆறு ஹூக்ளி ஆறு

8.நாட்டின் முதல் நீர் வழி மெட்ரோ போக்குவரத்து எங்கு தொடங்கப்பட்டது

விடை : கேரள மாநிலம் கொச்சி

9.புதிதாக தேசிய கட்சி என்ற அந்தஸ்தை பெற்ற கட்சி எது

விடை : ஆம் ஆத்மி கட்சி

10.வீட்டிலிருந்தே வாக்கு என்ற திட்டத்தை அறிமுகப்படுத்திய மாநிலம் எது

விடை : கர்நாடகா

11.புதிய பாராளுமன்ற திறப்பு விழாவின் நினைவாக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி எத்தனை ரூபாய்  நாணயத்தை வெளியிட்டார்

விடை : 75 ரூபாய்

12.பசுமை ஹைட்ரஜன் கொள்கையை வெளியிட்ட மாநிலம் எது?

விடை : இமாச்சல பிரதேசம் 

13.பிற பிற்படுத்தப்பட்ட வகுப்புக்கான இடஒதுக்கீடு சதவீதத்தை 27சதவீதமாக  உள்ளாட்சித் தேர்தல்களில் வழங்கிய மாநிலம் எது

விடை : குஜராத்

14.புதிதாக பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதாவில் எத்தனை சதவீதம் இட ஒதுக்கீடு  மக்களவையிலும் மாநில சட்டப்பேரவைகளிலும் பெண்களுக்கு வழங்கப்படுகிறது

விடை : 33 சதவிகிதம்

15.பிரதம மந்திரி பால  புரஸ்கார் விருதுகள் எந்த வயதுடைய குழந்தைகளுக்கு வழங்கப்படுகின்றன

விடை : ஐந்து முதல் 18 வயது உடைய குழந்தைகளுக்கு.

16.மிகவும் பிரசித்தி பெற்ற Wolf  விருதுகள் எந்த நாட்டினால் வழங்கப்படுகின்றன

விடை : இஸ்ரேல் நாடு

அறிவியல் மருத்துவம் வேளாண்மை கணக்கு இயற்பியல் வேதியல் போன்ற பல துறைகளிலும் மற்றும் இலக்கியங்கள் கலைத்துறைகளிலும் புகழ்பெற்றவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

17.உலக வங்கி தலைவராக அமெரிக்க குடியரசு தலைவர் ஜுபைடன் என்பவரால் நியமனம் செய்யப்பட்ட இந்தியரின் பெயர் என்ன

விடை : அஜய் பங்கா.

18.2023 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா விருது பெற்றவர் யார்

விடை : நந்தினி குப்தா இவர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்

19.நீண்ட காலம் மாநில முதல்வராக பணியாற்றிய இரண்டாவது முதலமைச்சர் என்ற பெருமையைப் பெறுபவர் யார்

விடை : நவீன் பட்நாயக்

இவர் ஒடிசா  மாநில முதல்வராக பணியாற்றி வருகிறார் இவர் 23 ஆண்டுகள் 138 நாட்கள் மாநில முதல்வராக பணியாற்றியுள்ளார் இவருக்கு முன்பாக மேற்கு வங்கத்தினுடைய முதல்வராக பணியாற்றிய ஜோதிபாசு பதவி காலத்தை இவர் சமன் செய்து உள்ளார் இவருக்கு முன்பாக மிக அதிக நீண்ட காலம் மாநில முதல்வராக பணியாற்றியவர் சிக்கிம் மாநிலத்தைச் சேர்ந்த பவன் குமார் சேம்லிங் . இவர் 24 ஆண்டுகள் 166 நாட்கள் மாநில முதல்வராக பணியாற்றியுள்ளார்

20.2023 ஆம் ஆண்டுக்கான நார்மன் இ போர் லாக் விருதை பெற்றவர் யார்

விடை : சுவாதி நாயக்.

21.தலைநகர் டெல்லியில் கட்டப்பட்ட புதிய பாராளுமன்றத்திற்கு என்ன பெயர் சூட்டப்பட்டுள்ளது

விடை : சென்ட்ரல் விஸ்டா

22.நீதிபதி அஜய் லம்பா என்பவரின் தலைமையில் எதற்காக குழு மத்திய அரசால் அமைக்கப்பட்டது

விடை: மணிப்பூர் மெய்தே சமூகத்தினருக்கும் கொக்கி சமுகத்திற்கு இடையே முண்ட இன கலவரம் தொடர்பாக விசாரணை நடத்த இந்த குழு மத்திய அரசால் அமைக்கப்பட்டது

23.மகாராஷ்டிரத்தில் உள்ள அகமது நகருக்கு புதிதாக என்ன பெயர் சூட்டப்பட்டுள்ளது

விடை:  அகல்யா நகர்

24.முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் எதற்காக குழு அமைக்கப்பட்டது

விடை : ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற திட்ட சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்டது.

25.அதானிக்கு எதிராக கேள்வி கேட்க லஞ்சம் பெற்றதாக பதவி நீக்கம் செய்யப்பட்ட திருனாமுல் காங்கிரஸ் கட்சி உறுப்பினரின் பெயர் என்ன

விடை : மகுவா மொவித்ரா

26.2023 டிசம்பர் மாதத்தில் நடைபெற்ற நான்கு மாநில சட்டமன்றத் தேர்தலில் எந்த கட்சி ஆட்சி அமைத்தது

விடை : மத்திய பிரதேசம் ராஜஸ்தான் சத்தீஸ்கர் மாநிலங்களில் பாஜக வெற்றி தெலுங்கானாவில் காங்கிரஸ் வெற்றி

27.புதிதாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்ற மாநிலங்களில்  புதிதாக தேர்ந்தெடுக்கப் பட்டமுதல்வர்கள் யார்.

விடை :

தெலுங்கானா– ரேவந்த் ரெட்டி

மத்திய பிரதேசம்- மோகன் யாதவ்

சத்தீஸ்கர் -விஷ்ணுதியோ சாய்

ராஜஸ்தான் – பஜன் லால் சர்மா.

28.ஐக்கிய நாடுகள் சபையின் கணக்குப்படி இந்தியாவின் மக்கள் தொகை எவ்வளவு

விடை : 142.86 கோடி.இதன்படி இந்தியா உலகத்தில் அதிகமான மக்கள் தொகை கொண்ட நாடாக ஐக்கிய நாடுகள் நாடுகள் சபை அறிவித்துள்ளது சீனாவின் மக்கள் தொகை 142.57 கோடியாக ஐநா சபை அறிவித்துள்ளது

29.ஆப்ரேஷன் காவிரி என்பது எது தொடர்பானது

விடை : வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியர்களை சூடானில் இருந்து மீட்பதற்கான ஒரு நடவடிக்கை.

30.எந்த நாட்டின் மிக உயரிய விருது இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முக்கு வழங்கப்பட்டது

விடை : தென் அமெரிக்கா நாடான சூரியனாம்

31.இந்த ஆண்டு எந்தெந்த நாடுகளில் இருந்து பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு விருதுகள் வழங்கப்பட்டன

விடை :

1.எகிப்து நாட்டின் ஆர்டர் ஆஃப் தி நைல்  பட்டமும்

2.பிரான்ஸ் நாட்டின் மிக உயரிய அரசு  ராணுவவிருதான Grand cross legion of  

order. விருதும் வழங்கப்பட்டது

32.சமீபத்தில் எந்தெந்த மாநிலங்களில் லித்தியம் தொகுப்புகள் கண்டறியப்பட்டன

விடை : ஜம்மு காஷ்மீர் ,ராஜஸ்தான்

33.நிலவின் தென் துருவத்தை சென்றடைந்த முதல் நாடு உலகத்திலேயே எது

விடை : இந்தியா.சந்திராயன்-3 விண்கலம் மூலம் இஸ்ரோ அனுப்பிய விக்ரம் தரையிறங்கு களம் நிலவில் பத்திரமாக தரை இறங்கியது இது நிலவின் தென்பகுதியை சென்று அடைந்தது

34.சூரியனின் வெளிப்புற பகுதியை ஆராய இஸ்ரோவால் அனுப்பப்பட்ட விண்கலத்தின் பெயர் என்ன

விடை : ஆதித்யா  L1. இது பிஎஸ்எல்வி ஒன்று ராக்கெட் மூலம் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது

35.மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் இஸ்ரோவின் திட்டத்தின் பெயர் என்ன

விடை : ககன் யான்

1.சமீபத்தில் Euro நாணயத்தை ஏற்றுக் கொண்ட நாட்டின் பெயர் என்ன

விடை : குருஷியா.இது Kuna என்ற நாணயத்திற்கு மாற்றாக Euro நாணயத்தை ஏற்றுக் கொண்டு Euro மண்டலத்தின் இருபதாவது உறுப்பினராக இணைந்தது.

2.ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில்  தற்காலிக உறுப்பினர்களாக பதவி ஏற்று கொண்ட ஐந்து நாடுகள் எவை

விடை : இக்குவாடார் ,ஜப்பான் ,மால்டா, மொசம்டபி ,ஸ்விட்சர்லாந்து.

3.அலெக்ஸ் பியாலியாட்ஸ்கி  என்பவர் சமீபத்தில் ஏன் செய்திகளில் இடம் பிடித்தார்

விடை : இவர் அமைதிக்கான நோபல் பிரைஸ் பெற்றவர்  கள்ளக் கடத்தலில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் இவருக்கு பத்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது

4.வாக்னர் என்ற தனியார் ராணுவ குழு எந்த நாட்டில் செயல்பட்டு வருகிறது 

விடை : ரஷ்யாவின் சார்பில் உக்ரனில் போரிட்டு வந்த  இந்த குழு சமீபத்தில் ரஷ்யாவுக்கு எதிராக திரும்பி  கிரம்ப்ளின் மாளிகை நோக்கி அணிவகுத்து சென்றது ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது

5.சமீபத்தில் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்வதை சட்ட விரோதமாக அறிவித்த நாடு எது?

விடை : இத்தாலி

6.சமூக வலைத்தளமான ட்விட்டரின்  தற்போதைய பெயர் என்ன

 விடை : எக்ஸ்(X)

7.ஐரோப்பிய ஒன்றியம் எந்த நாட்டின் மீது பொருளாதார தடை நீட்டித்து வருகிறது

விடை : பெலாரஸ்.

8.சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் சமீபத்தில் இணைந்த நாடு எது?

விடை :

அர்மேனியா இது 124 வது நாடாக இணைந்துள்ளது

அர்மேனியா இது 124 வது நாடாக இணைந்துள்ளது

அர்மேனியா இது 124 வது நாடாக இணைந்துள்ளது

9.சமீபத்தில் இந்தியாவுக்கு வெளியே டாக்டர் பி ஆர் அம்பேத்கார் அவர்களின் சிலை எந்த நாட்டில் திறக்கப்பட்டது

விடை : அமெரிக்காவின் மேரிலாந்து மாகாணத்தில் இந்த சிலை திறக்கப்பட்டது இந்த சிலை சமத்துவத்தின் சிலை என்று அழைக்கப்படுகிறது

10.சமீபத்தில் இந்தியாவுக்கு இடையே காந்தியின் சிலை எந்த நாட்டில் திறக்கப்பட்டது

விடை : தென்னாப்பிரிக்காவின் ஜோகனஸ் பர்க் என்ற இடத்தில் உள்ள டால் ஸ்டைல் பண்ணையில் 

11.அடுத்த ஓராண்டுக்கான ஜி 20 உச்சி  மாநாட்டுக்கான தலைமைப் பொறுப்பை எந்த நாடு ஏற்க உள்ளது

விடை : பிரேசில் நாடு. பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா சில்வாவிடம் பொறுப்பை ஒப்படைத்தார்.

TEST BATCHES with 60 tests (40 Unit Tests 20 Full Tests Test )CONDUCTED and Studty Materials avaiable both in Tamil and English Medium IN SAI IAS ACADEMIC CENTRE,KRISHNAGIRI.

1.2023 ஆம் ஆண்டு நபர்கள் நிதி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டவர் யார்

விடை : பிவிஆர் சுப்பிரமணியம் ஐஏஎஸ்

2.தேசிய தூய்மைப் பணி ஆணையத்தின் தலைவர் யார்

விடை மா வெங்கடேசன்

3.தலைமை கணக்குத் தணிக்கையாளர் யார்

விடை : எஸ் எஸ் துபே

4.யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் இன் தலைவர் யார்

விடை : மனோஜ் சோனி

5.மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையராக நியமிக்கப்பட்டவர் யார்?

விடை : பிரவீன் குமார் ஸ்ரீவஸ்தவா

6.ஜார்கண்ட் மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டவர் யார்?

விடை : சிபி ராதாகிருஷ்ணன்

7.நாகாலாந்து மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டவர் யார்?

விடை : இல கணேசன்

1.எட்சன் அரண்டெஸ் டு நசிமெண்டோ

பிரேசில் நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற கால்பந்து விளையாட்டு வீரர் இவர் பீலே என்றும் அழைக்கப்படுவார்.

2.திவான் சுந்தரம் -இந்தியாவின் புகழ்பெற்ற ஓவியக் கலைஞர்

3.ராண்டர் கை  -புகழ் பெற்ற திரைப்பட ஆராய்ச்சியாளர்

4.பேராசிரியர் ராபர்ட் ஹார்டு கிரேவ் -திராவிட இயக்கங்கள் பற்றிய ஆராய்ச்சியாளர்

5.மிலன் குந்தேரா– பிரபல பஞ்சு எழுத்தாளர்

6.எஸ் எஸ் பத்ரிநாத் -சங்கர நேத்ராலயாவின் நிறுவனர் மற்றும் பிரபல கண்  

    மருத்துவர்

7.விஜயகாந்த் -தேமுதிக என்ற கட்சி நிறுவனத் தலைவர்

8.அப்துல் கனி அசாரி -காஷ்மீர் பல்கலைக்கழகத்தின் அரபி மொழி துறையின்  

     தலைவர்

9.வாய்மை நாதன்– மரபுக் கவிதையில் தேர்ந்தவர் சிறந்த எழுத்தாளர்.

1.மருத்துவத்திற்கான நோபல் பரிசு

-கட்டலின்  கரிக்கு, (Katalin Karikó)ட்ரூ     வெயிய்ஸ்மேன். (Drew Weissman) இரண்டு பேருக்கு நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

2.இயற்பியலுக்கான  நோபல்பரிசு

பியர் அகோஸ்டினி, (pierre agostine,பேரன்க் கிராஸ், (Ferenc krausz)

அன்னே எல்’ஹுல்லியர்(Anne L huillier)ஆகிய மூன்று பேருக்கு நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

3.வேதியலுக்கான நோபல் பரிசு

, மவுங்கி பவெண்டி (Moungi G Bawendi), லூயிஸ் புரூஸ்( Louis E Brus ),அலெக்சி எகிமோவ்  (Alexi I Ekimov.) ஆகிய மூன்று பேருக்கு நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

4.அமைதிக்கான நோபல் பரிசுநர்கஸ்  முகமது.

5.இலக்கியத்திற்கான நோபல் பரிசு  –ஜான் ஃபோஸ் (Jon Fosse)

6.பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு– கிளாடியா கோல்டின்(Claudia goldin)

   ராமன் மகசேசே விருது -2023

விடை :

1.மருத்துவர் ரவி கண்ணன்

இந்தியாவை சேர்ந்த இவர் பிரபல புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர்

2.கோர்வி ரக்சன் 

இவர்வங்கதேசத்தை சேர்ந்த கல்வி செயல்பாட்டாளர்.

3.யூஜினியோ 

இவர் திமோர் நாட்டை சேர்ந்த சூழலியல் செயல்பாட்டாளர்.

4.மிரியம் கொரோனெல் ஃபெர்ரர் 

இவர் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த அமைதிக்கான தூதர்

1.2023 ஆம் ஆண்டில்  எத்தனை பேருக்கு பத்ம விபூஷன் விருதுகள் வழங்கப்பட்டன அவர்கள் யார் 

விடை ஆறு பேருக்கு வழங்கப்பட்டன.அவர்கள் பின்வருமாறு
1. பாலகிருஷ்ண தோஷி  (மரணத்திற்குப் பின்) – கட்டிடக்கலை
2. ஜாகிர் உசேன் -கலை
3. எஸ்.எம்.கிருஷ்ணா- பொது விவகாரம்
4. திலீப் மஹாலனாபிஸ் (மரணத்திற்குப் பின்) -மருந்துவம்
5. ஸ்ரீனிவாஸ் வரதன் (அமெரிக்கா) -அறிவியல் & பொறியியல்
6. முலாயம் சிங் யாதவ் (மரணத்திற்குப் பின்) -பொது விவகாரம்)

2.2023 ஆம் ஆண்டில் எத்தனை பேருக்கு பத்மபூஷன் விருதுகள் வழங்கப்பட்டன அவர்கள்   யார்

விடை : ஒன்பது பேருக்கு வழங்கப்பட்டன அவர்கள் பெயர் பின்வருமாறு
1. எஸ்.எல்.பைரப்பா இலக்கியம் & கல்வி
2. ஸ்ரீ குமார் மங்கலம் பிர்லா வர்த்தகம் & தொழில்
3. ஸ்ரீ தீபக் தர் அறிவியல் & பொறியியல்
4. செல்வி வாணி ஜெய்ராம் கலை
5. சுவாமி சின்ன ஜீயர் மற்றவை – ஆன்மீகம்
6. செல்வி சுமன் கல்யாண்பூர் கலை
7. ஸ்ரீ கபில் கபூர் இலக்கியம் & கல்வி
8. செல்வி சுதா மூர்த்தி சமூக பணி
9. ஸ்ரீ கமலேஷ் டி படேல் மற்றவை – ஆன்மீகம்.

3.2023 ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருதுகள் எத்தனை பேருக்கு வழங்கப்பட்டன

விடை : 91 பேர்

4.2023 ஆம் ஆண்டில் தமிழகத்திலிருந்து பத்ம விருதுகள் பெற்றவர் யார் யார்

விடை : பத்மபூஷன் விருது வாணி ஜெயராம் திரைப்படப் பாடகி

பத்மஸ்ரீ விருதுகள்

1.கே கல்யாண சுந்தரம் பரதநாட்டிய கலைஞர்,

2.வடிவேலு மற்றும் மாசி சாடையில் இவர்கள் இருவரும் இருளர் சமூகத்தை சேர்ந்த பாம்பு பிடி வல்லுநர்கள்,

3.பாலம் கல்யாணசுந்தரம் இவர் நூலகரும் மற்றும் சமூக சேவகரும் ஆவார்

4.கோபால்சாமி வேலுச்சாமி இவர் மருத்துவர்

1.சாஸ்த்ரா ராமானுஜன் (2023)பரிசு யாருக்கு வழங்கப்பட்டது

.-.Ruixiang Zhang.

2.எந்த எந்த விருதுகளை எம் எஸ் சுவாமிநாதன் பெற்றுள்ளார்.

பத்மஸ்ரீ பத்மபூஷன் பத்மவிபூஷன்.உலக உணவு பரிசு.ராமன் மேகசசி  விருது மற்றும் ஐன்ஸ்டீன் உலக அறிவியல் விருது.

3.ஆசியாவின் நோபல் பரிசு என்று அழைக்கப்படுவது எது?

விடை : ராமன் மேகசேசெ விருதுகள்

4.2023 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது தமிழில்  எந்த நூலுக்கு வழங்கப்பட்டது

விடை தேவி பாரதி என்பவர் எழுதிய நீர்வழி படூஉம் என்ற நூலுக்கு வழங்கப்பட்டது.

5.2023 ஆம் ஆண்டுக்கான பால புரஸ்கார் விருது எந்த நூலுக்கு வழங்கப்பட்டது

       விடை : உதயசங்கர் எழுதிய ஆதவனின் பொம்மை என்ற நூலுக்கு.

6.2023 ஆம் ஆண்டுக்கான யுவ புரஸ்கார் விருது எந்த நூலுக்கு வழங்கப்பட்டது

விடை : ராம் தங்கம் எழுதிய திருக்கார்த்தியல் என்ற சிறுகதை தொகுப்புக்கு.

7.முதலாவது சாகித்ய அகாடமி விருது யாருக்கு எந்த ஆண்டு வழங்கப்பட்டது

விடை : 1960 ஆம் ஆண்டு ஆர் கே நாராயணன் எழுதிய தி கைடு என்ற நாவலுக்கு.

1.மூன்று வடிவ கிரிக்கெட் போட்டிகளிலும் சதம் அடித்த முதல் இந்திய கேப்டன் என்று பெயர் பெற்றவர் யார்

விடை : ரோகித் சர்மா

2.டெஸ்ட் போட்டிகளில்  அதிவேகமாக 450 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் என்ற மைல் கல்லை அடைந்தவர் யார்?

விடை : ரவிச்சந்திரன் அஸ்வின்

3.ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் கோப்பையை வென்ற நாடு எது

விடை : இந்தியா கொழும்பில் நடைபெற்ற இந்த போட்டியில் இலங்கையில் வீழ்த்தி இந்தியா எட்டாவது முறையாக கோப்பையை வென்றது

4.உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதிப் போட்டி எங்கு நடைபெற்றது இதில்  எந்த நாடு கோப்பையை வென்றது

விடை : அகமதாபாத்தில் . இந்தியா ஆஸ்திரேலியா இடையான நடைபெற்ற  உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி இந்தியாவை வீழ்த்தி கோப்பையை ஆறாவது முறையாக வென்றது

5.உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் யார் 

விடை :விராட் கோலி 765 ரன்கள்  குவித்து தொடர் நாயகன் விருதை வென்றார்.

6.2023 ஆம்ஆண்டு  கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில் பதக்கம் வென்றவர்கள் யார்

விடை :

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ்

ஆண்கள்  ஒற்றையர் பிரிவு பதக்கம் வென்றவர் -செர்பியாவின் நோவக் ஜோகோவித் ரன்னர் அப்  -கிரீஸ் நாட்டின் ஸ்டபனோஸ்  சிட்சு பாஸ்(Stefanos Tsitsipas)

பெண்கள் ஒற்றைர் பிரிவுபதக்கம் வென்றவர் -பெல்லாரஸ் நாட்டை சார்ந்த அரண்யா சபலங்க்கா(Aryna Sabalenka)ரன்னர் அப்   -பெலரஷ்யாவின்எலனா ரிபாகினா.

பிரென்ச் ஓபன் டென்னிஸ்

ஆண்கள் ஒற்றையர் பிரிவுபதக்கம் வென்றவர்   செர்பியாவின் நோவக் ஜோகோவித்( Novak Djokovic -Serbia.23rd Title)ரன்னர் அப்- நார்வே நாட்டைச் சார்ந்த கஸ்பர் ரூட் (Casper Ruud) 

பெண்கள்  ஒற்றையர் பிரிவுபதக்கம் வென்றவர் -போலந்து நாட்டு வீராங்கனை ஈகா ஸ்வியாடெக்(Iga Świątek-Poland)ரன்னர் அப்  செக் குடியரசை சேர்ந்த கரோலினா மச்சோவா(Karolina Muchova)

விம்பிள்டன் டென்னிஸ் போட்டி

ஆண்கள் ஒற்றையர் பிரிவு பதக்கம் வென்றவர் -ஸ்பெயின் நாட்டை சேர்ந்த  அல்கராஸ்  கார்பியா(C.Alcaraz Garfia) ரன்னர் அப்-நோவா ஜோகோவிக்(Novak Djokovic)

பெண்கள் ஒற்றையர் பிரிவுபதக்கம் வென்றவர் -செக் குடியரசு வீராங்கனை மார்கெட்டா வோன்ட்ரோ சோவா(M. Vondroušová)ரன்னர் அப் -ஓ ஜாபியூர் (O. Jabeur)

அமெரிக்கன் ஓபன் டென்னிஸ்

ஆடவர் ஒற்றையர் பிரிவுபதக்கம் வென்றவர் செர்பியாவின் நோவக் ஜோகோவித்(Novak Djokovic)ரன்னர் அப்  ரஷ்யாவின் டேனியல் மெத்ததேவ்

மகளிர் ஒற்றையர் பிரிவுபதக்கம் வென்றவர் -அமெரிக்காவின் கோகோ காப்(Coco Gauff)ரன்னர் அப்- பெலரஷ்யாவின்எலனா ரிபாகினா.

7.எந்த ஆடவர் டென்னிஸ் விளையாட்டு வீரர் இதுவரையில் அதிகமான விம்பில்டன் பட்டங்களை பெற்றுள்ளார்

விடை : சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த ரோஜா பெடரர் இதுவரை எட்டு முறை இப்பட்டத்தை பெற்றுள்ளார்.


8.எந்தப் பெண் விளையாட்டு வீராங்கனை இதுவரையில் அதிகமான விம்பிள்டன் பட்டங்களை பெற்றுள்ளார்

விடை : மார்டினா நவரத்தினோவா இதுவரை 9 முறை இப்பட்டத்தை பெற்றுள்ளார்

9.எத்தனை இந்தியர்கள் இதுவரை டென்னிஸ்  கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று உள்ளார்கள்

விடை : நான்கு பேர்கள் ரோஷன் போ பண்ணா,சானியா மிர்சா, மகேஷ் பூபதி, லியாண்டர் பயஸ்.

1.டென்மார்க் தலைநகர் கார்பன் ஹாக் எனில் நடைபெற்ற உலக பேட்மிட்டன் சாம்பியன்ஷிம் போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்றவர் யார்

விடை : இந்திய வீரர் எச் எஸ் பிரனோய்.

11.ஆசிய பேட்மிட்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் எந்த நாடு தங்கப் பதக்கத்தை வென்றது

விடை : இந்தியா இந்தியாவை சேர்ந்த ஜோடி சாய்ராஜ் ரங்கீ ரெட்டி மற்றும் சிராக்  ஷெட்டி இணை தங்கப் பதக்கத்தை வென்றது. அதேபோல் இதே இணை இந்தோனேசியா ஓப்பன் பேட்மிட்டன் ஆடவர் அட்டையர் பிரிவிடும் கொரியா ஓபன் பேட்மிட்டன் ஆடவர் ரிட்டயர் பிரிவிலும் சாம்பியன் பட்டங்களை வென்றது.

12.2023 ஆம் ஆண்டுக்கான லாரல் உலக விளையாட்டு வீரர்கான விருது யாருக்கு வழங்கப்பட்டது

விடை : அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டன் லயனல் மெஸ்ஸி என்பவருக்கு வழங்கப்பட்டது.

13.தீபா மகளிர் உலக கோப்பை கால்பந்து சாம்பியன் எந்த நாடு பெற்றது

விடை : ஸ்பெயின் நாடு இருதிச் சுற்றில் இங்கிலாந்து அணியை  தோற்கடித்தது இந்தப் போட்டி சிட்னி நகரில் நடைபெற்றது

14.உலகக் கோப்பை செஸ் தொடரின் இறுதிப்போட்டியில் வெள்ளி பதக்கத்தை யார் வென்றார்

விடை :இந்தியாவைச் சேர்ந்த பிரகஞ்ஞானந்தா என்பவர் இந்தப் போட்டி அசர் பைசா நாட்டில் நடைபெற்றது

15.இந்தியாவின் நம்பர் ஒன் செஸ் வீரராக இந்த ஆண்டு யார் அறிவிக்கப்பட்டுள்ளார்,

விடை :தமிழ்நாட்டைச் சேர்ந்த முகேஷ் என்பவர் இப்போ இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளார் இவர் சர்வதேச செஸ் கூட்டமைப்பின் தரவரிசை பட்டியலில் விஸ்வநாதன் ஆனந்தை முந்தி இந்த சாதனை படைத்துள்ளார்

16.கோனேரு ஹம்பி என்பவர் யார்

விடை : இவர் இந்தியாவின்  செஸ் வீராங்கனை இவர் கஜகஸ்தான் நாட்டில் நடைபெற்ற பி டே உலக செஸ் சாம்பியன் மகளிர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார்

17.உலக சாம்பியனும் முதல் நிலை வீரருமான நார்வே நாட்டை சேர்ந்த மேக்னஸ் கார்லெசன் என்பவரை வீழ்த்திய இந்திய செஸ் வீரர் யார்

விடை :கார்த்திகேயன் முரளி இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்.

18.இந்தியாவின் நம்பர் ஒன் செஸ் வீரர் யார்.

விடை :தமிழ்நாட்டைச் சேர்ந்த முகேஷ் சர்வதேச செஸ் கூட்டமைப்பின் தரவரிசை பட்டியலில் விஸ்வநாதன் ஆனந்தை பின்னுக்கு தள்ளி இந்த சாதனையை அவர் படைத்தார்

TNPSC 2024 REGULAR BATCH ,WEEKEND BATCH AND TEST BATCHES CONDUCTED IN SAI IAS ACADEMIC CENTRE,KRISHNAGIRI.

19.ஆடவருக்கான உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்றவர் யார்

விடை :நீ ராஜ் சோப்ரா இவர் 88.17 மீட்டர் தொலைவு ஈட்டியை எரிந்து தங்கப்பதக்கம் வென்றார். இது புட்டா பெஸ்ட் நகரில் நடைபெற்ற ஒரு போட்டி.

20.தமிழ்நாட்டைச் சேர்ந்த சந்தோஷ் குமார் தமிழரசன் என்ற தடகள விளையாட்டு வீரர் ஏன் சமீபத்தில் செய்திகளில் இடம் பிடித்தார்

விடை :பாங்காங் நகரில் நடைபெற்ற ஆசிய தடைகளை சாம்பியன்ஷிப் போட்டியில் 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் வெண்கலம் வென்றார்

21.பாங்காக் நகரில் நடைபெற்ற ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா எத்தனையாவது இடத்தை பிடித்தது

விடை : மூன்றாவது இடம் இதில் ஆறு தங்கம் 12 வெள்ளி 9 வெண்கலம் என 27 பதக்கங்களை இந்தியா வென்றது.

22.அமெரிக்காவில் நடைபெற்ற டைமண்ட் லீக் தடகளைப் போட்டியில்  ஈட்டி எறிதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றவர் யார்

விடை :இந்திய வீரர்  நிராஜ் சோப்ரா இவர் 83.20 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறிந்து வெள்ளி பதக்கம் பெற்றார்.

23.தென்கொரியாவில் நடைபெற்ற ஜூனியர் உலக துப்பாக்கிச் சூடும் சாம்பியன்ஷி தொடரில் இந்தியா எத்தனையாவது இடத்தில் இருந்தது

விடை : இந்தியா ஆறு தங்கம் ஆறு வெள்ளி ஐந்து வெண்கலம் என 13 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருந்தது

24.இளவேனில் வாலறிவன் என்பவர் யார் இவர் ஏன் சமீபத்தில் செய்திகளில் இடம் பிடித்தார்

விடை : துப்பாக்கி சுடுதல் வீராங்கனை இவர் பிரேசில் நாட்டில் ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெற்ற உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் 100 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார்.

25.ரிதம் சங்குவான் என்பவர் யார்? இவர் ஏன் செய்திகளில் சமீபத்தில் இடம் பிடித்தார்

விடை :துப்பாக்கி சுடுதல் விளையாட்டு வீராங்கனை இவர் இந்தியாவை சேர்ந்தவர் சமீபத்தில் அசர் பைஜான் நகரில் நடைபெற்ற ஐ எஸ் எஸ் உலக கோப்பை துப்பாக்கிச் சூடுதல் தகுதி சுற்றில் இவர் 595 புள்ளிகளை குவித்து புதிய உலக சாதனை படைத்தார்.

26.பாரிஸில் நடைபெற்ற உலக வில் வித்தையில் ஆடவர் மகளிர் பிரிவுகளுக்கான காம்பவுண்ட் அணிகள் பிரிவில் இந்தியா எந்த பதக்கத்தை வென்றது

விடை : இந்தியா தங்கப் பதக்கத்தை வென்றது

27.பிரதமேஷ் ஜவகர் என்பவர் யார் ஏன் செய்திகளில் இடம் பிடித்தார்

விடை : இந்திய வில்வித்தை வீரர் இவர் மெக்சிகோவில் நடைபெற்ற உலகக்கோப்பை வில்வித்தை போட்டியில் ஆடவர் காம்பவுண்ட் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார்

28.19ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் எந்த நாட்டில் நடைபெற்றது

விடை :சீனா சீனா நாட்டைச் சேர்ந்த ஹாங்சூ நகரில் இப்போட்டிகள் நடைபெற்றது.

29.19ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா பதக்கப் பட்டியலில் எத்தனையாவது இடத்தை பிடித்தது

விடை : இந்தியா  நான்காவது இடத்தை பிடித்தது இந்தியா 28 தங்கம் 38 வெள்ளி 41 வெண்கலம் என மொத்தம் 107 பதக்கங்களை வென்றது.

30.ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் பதக்கப் பட்டியலில் இந்தியா எத்தனையாவது இடத்தை பிடித்தது

விடை : இந்திய ஐந்தாம் இடத்தை பிடித்தது இப்போோட்டில் 29 தங்கம் 31 வெள்ளி 51 வெண்கலம் என 111 பதக்கங்களை இந்தியா வென்றது.

31.எந்த இந்திய விளையாட்டு வீரருக்கு ஊக்கம் மருந்து சோதனைகளில் சிக்கி 21 மாதங்கள் தடை விதிக்கப்பட்டது

விடை : தீபா கர்மகார் என்ற ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை.

32.பவானி தேவி என்பவர் யார் அவர் ஏன் சமீபத்தில் செய்திகளில் இடம் பிடித்தார் 

விடை :இவர் வால்வீச்சு வீராங்கனை சீனாவின் வுக்ஸி நகரில் நடைபெற்ற ஆசிய வால்வீச்சு சாம்பியன்ஷிப் மகளிர் பிரிவில் வெண்கல பதக்கம் வென்ற முதல் இந்தியர்  வில்வித்தைஎன்ற பெருமையை சேர்ந்த இவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்பது கூடுதல் தகவல்

33.அதிதி சுவாமி என்பவர் யார் அவர் என் சமீபத்தில் செய்திகளில் இடம் பிடித்தார்

விடை : இவர் வில்வித்தை வீரர் ஜெர்மனியின் பெர்லி நகரில் நடைபெற்ற உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் காம்பவுண்டு தனிநகர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார்.

34.உலக  அலை சறுக்கு(Surfing) லீப் போட்டிகள் இந்த ஆண்டு எங்கு நடைபெற்றது

விடை :இந்தியாவில் மாமல்லபுரம் அருகே உள்ள கோவளத்தில் நடைபெற்றது இது இந்தியாவில் முதல்முறையாக நடைபெறும் அலை சறுக்கு போட்டியாகும்.

35.2028 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் எந்த நகரில் நடைபெற உள்ளது

விடை :அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ்.

36.2028 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் புதிதாக எத்தனை விளையாட்டுக்கள் சேர உள்ளன அவை யாவை

விடை : ஐந்து விளையாட்டுக்கள் அவை Baseball/ softball, cricket, flag football, lacrosse and squash.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Home
Call
Mail
error: Content is protected !!