டிசம்பர் 2023 நடப்பு செய்திகள் current affairs December-2023 in tamil-Sai ias academic centre

டிசம்பர் 2023 நடப்பு செய்திகள் SAI IAS ACADEMIC CENTRE

டிசம்பர் 2023 நடப்பு செய்திகள்

SAI IAS ACADEMIC CENTRE

டிசம்பர் 2023 தமிழ்நாடு, இந்தியா மற்றும்  பன்னாட்டு  அளவில் நடை பெற்ற   நிகழ்வுகளை தொகுத்து  இதில் வழங்கி உள்ளோம்.எந்த ஒரு முக்கிய நிகழ்வும் விடுபடாமல் இருக்கும் வண்ணம் மிகுந்த கவனத்துடன் வினா விடைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

டிசம்பர் 2023 தமிழக செய்திகள்

1.பிரதம மந்திரி சுவாம்நிதி திட்டத்திற்கு street வியாபாரிகளுக்கு கடன் அளிக்கும் திட்டத்தின் முதல் நிலையில் இருக்கும் தமிழ்நாட்டின் மாநகராட்சியின் பெயர் என்ன.

விடை; கரூர் மாநகராட்சி

கூடுதல் தகவல்கள் இரண்டாம் இடத்தில் தாம்பரம் மாநகராட்சியும் மூன்றாம் இடத்தில் திருச்சி மாநகராட்சி உள்ளது

2.நம்ப பள்ளி அறக்கட்டளை என்பது என்ன .

விடை தனியார் பங்களிப்புடன் அரசு பள்ளிகளில் உள்கட்ட அமைப்பை மேம்படுத்ததற்காக டிசம்பர் 19ஆம் தேதி தமிழக முதல்வர் அவர்களால் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது

3.நூலக நண்பர்கள் திட்டத்தின் நோக்கம் என்ன .

விடை; நூலகத்திற்கு நேரடியாக வர முடியாத முதியவர்கள் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு உதவும் வகையில் நூலகத்திலிருந்து புத்தகங்களை இவர்களுக்கு எடுத்து கொடுக்க தன்னார்வலர்கள் இந்த பணியை மேற்கொள்வார்கள் இதுவே இந்த திட்டத்தின் நோக்கம் ஆகும்

4.டி லலிதா என்பவர் யார் இவர் ஏன் சமீபத்தில் செய்திகளில் இடம் பிடித்தார்.

விடை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முதல்முறையாக ஒரு பெண் சூலம் தாங்கியாக நியமிக்கப்பட்டுள்ளார் இதுநாள் வரை இந்த பணியை ஆண்கள் மட்டுமே மேற்கொண்டு வந்த நிலையில் முதல் முறையாக ஒரு பெண் இப்பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது 


5.வைஷாலி என்பவர் யார் அவர் ஏன் செய்திகளில் இடம் பிடித்தார்

விடை இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த சதுரங்க விளையாட்டு வீரர் இந்தியாவில் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை பெற்ற மூன்றாவது பெண்மணி கிரான்மாஸ்டர் பட்டத்தை பெற்ற முதல் சகோதர சகோதரி ஜோடியாக வைஷாலி என்ற இவரும் இவருடைய சகோதரரான பிரஞ்ஞானந்தாவும் உள்ளனர்.

6.உலகின் மிக இளம் பெண் கிரான் மாஸ்டர் வீராங்கனை என்ற பெருமையை பெறுபவர் யார்

விடை கோனேரி அம்பி இவர் 2002 ஆம் ஆண்டில் 15வது வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்றார் .

7.இந்தியாவில் இதுவரை எத்தனை பெண்மணிகள் கிரான் மாஸ்டர் பட்டத்தை பெற்று உள்ளனர் அவர்களின் பெயர் என்ன

விடை: 3 பெண்மணிகள் கோனேரி ஹம்பி துரோணவள்ளி ஹரிகா மற்றும் வைஷாலி.

8.ஸ்பர்ஷ் பாரதி  என்பது என்ன

விடை:இது சென்னை ஐஐடி பேராசிரியர்களால் உருவாக்கப்பட்ட பாரதி எழுத்து வடிவில் ஒரு துணைப் பகுதியாகும். இது உள்ளுணர்வால் அறியப்படுகின்ற காட்சி வடிவ எழுத்து வடிவம் ஆகும். இந்த பிரெய்லி  எழுத்து முறையை இந்திய மொழிகளில் பயன்படுத்த முடியும்.


9.
இம்புடியன்ஸ் கருப்பசாமி என்பது என்ன

விடை:தமிழ்நாட்டின் களக்காடு முண்டாந்துறை புலிகள் காப்பகத்தில் இருந்து புதிய தாவர இனத்தை இந்திய தாவரவியல் ஆய்வு ஆட்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர் இந்த தாவரவகைக்கு டாக்டர் எஸ் கருப்பசாமி என்பவருடைய பெயர் சூட்டப்பட்டுள்ளது இவர் தாவரவியல் அறிஞர் ஆவார்.

10.இந்த ஆண்டு தமிழ்நாட்டில் எந்த ஊரில் மிக அதிக அளவிலான மழை பதிவாகியுள்ளது

விடை: தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் என்ற ஊரில் அங்கு  ஒரே நாளில்பதிவாகியுள்ள மொத்த மழையளவு 95 சென்டிமீட்டர்.

11.தமிழ்நாட்டில் ஜனவரி 24ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஆறாவது கேலோ போட்டியின் உருவ சின்னம் எது

விடை வீரமங்கை வேலு நாச்சியார்.

டிசம்பர் 2023 தேசிய செய்திகள்

1. கேப்டன் கீர்த்திகா கௌல் என்பவர் ஏன் சமீபத்தில் செய்திகளில் இடம் பிடித்தார்

விடை இவர் உலகின் மிக உயரமான இடத்தில் அமைந்துள்ள  சியாச்சின் பகுதியில் பணி அமர்த்தப்பட்ட முதல் பெண்  மருத்துவஅதிகாரி ஆவார்.

2.PMGKAY  என்பது என்ன

விடை: இது பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்னை யோஜனா என்பதாகும் இத்திட்டத்திற்கு தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மானிய விலையில் வழங்கப்படும் உணவு தானியத்துடன் சேர்த்து ஒரு பயனாளிக்கு மாதம் ஐந்து கிலோ இலவச உணவு தானியங்கள் வழங்கப்படுகிறது 2020 ஆம் ஆண்டு பெருந்தோற்றினால் ஏற்படும் சவால்கள் எதிர் கொள்வதற்காக கொண்டுவரப்பட்ட ஒரு திட்டமாகும் இத்திட்டம் மேலும் 5 ஆண்டுகளுக்கு அதாவது 2028 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

3.ரயில் தண்டவாளத்தில்  யானைகள் இருப்பதைப் பற்றி ரயில் எஞ்சின் ஓட்டுநருக்கு சரியான நேரத்தில் எச்சரிக்கை  வழங்க புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளஅமைப்பின் பெயர் என்ன

விடை: கஜராஜ்அமைப்பு.

4.கற்பா நடனம் எந்த மாநிலத்தில் ஆடப்படுகிறது அது ஏன் சமீபத்தில் இடம் பெற்றது

விடை: இது குஜராத் மாநிலம் முழுவதும் நடத்தப்படும் ஒரு சடங்கு சார்ந்த மற்றும் பக்திசார் நடனம் ஆகும் இது சமீபத்தில் தொட்டு உணர முடியாத மகத்தான கலாச்சார பாரம்பரியங்களில் பட்டியலில் (Intangible cultural heritage list)சேர்க்கப்பட்டுள்ளது unesco பட்டியலில் இடம் பிடித்த இந்தியாவின் 15 ஆவது கலாச்சார அம்சம் ஆகும். கூடுதல் தகவல்கள் கல்கத்தாவின் துர்கா பூஜை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இப்ப பட்டியலில் சேர்க்கப்பட்டது

5.புதிதாக அணு மின் நிலைய அலகு எந்த அணுமின் நிலையத்தில் சேர்க்கப்பட்டது

விடை: காக்கிரபர அணுமின் நிலையத்தில் KAPP-4  என்ற அணு மின் நிலையளவு சேர்க்கப்பட்டது இதனுடைய உற்பத்தி திறன் 700 மெகாவாட்.


6. 
அக்ஷதா கிருஷ்ணமூர்த்தி என்பவர் யார்

விடை: இவர் நாசாவில் பணிபுரியும் முதல் பெண் அறிவியலார் ஆவார்.மார்ஸ் சுற்றுக்கலனை இயக்கிய முதல் இந்திய குடிமகள் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்
7.கர்னல் சுனிதா  என்பவர் ஏன் சமீபத்தில் செய்திகளில் இடம் பெற்றார் விடை இவர் ராணுவ மருத்துவ படை அதிகாரி டெல்லி ராணுவ குடியிருப்பு பகுதியில் ஆயுதப்படை மாற்று மையத்தில் படை தளபதியாக பொறுப்பேற்ற முதல் பெண் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்..

8. சம்மக்கா சரக்கா என்ற மத்திய பழங்குடியினர் பல்கலைக்கழகம் எங்கு அமைந்துள்ளது

விடை தெலுங்கானா கூடுதல் தகவல்கள் இந்திய பாராளுமன்றத்தில் இதற்கான சட்ட திருத்த மசோதா 2023 ஆம் ஆண்டின் நிறைவேற்றப்பட்டது.

9.பிரசாத் அகர்வால் என்பவர் ஏன் சமீபத்தில் செய்திகள் இடம் பெற்றார்

விடை நாராயின் சேவா சதன் தான் என்ற அமைப்பின் தலைவர் இவருக்கு குடியரசுத் தலைவர்  அவர்களால்சிறந்த ஆளுமை மாற்றுத்திறனாளிகளுக்கு  அதிகாரம் அளித்தல்என்ற மதிப்புமிக்க தேசிய விருது வழங்கப்பட்டது.

10.இந்தியாவுக்கு வெளியே சமீபத்தில் எந்த நாட்டில் திருவள்ளுவர் சிலை திறக்கப்பட்டது

விடை: பிரான்ஸ் நாட்டில் செர்ஜி என்ற நகரில்.

11.சர்வதேச தேயிலை தினம் எந்த தினத்தில் கொண்டாடப்படுகிறது

விடை: டிசம்பர் 15

12. ஒரே ஆண்டில் 100 மில்லியன் பயணிகளை ஏற்றுச் சென்று சாதனை படைத்த இந்திய விமான நிறுவனம் எது?

விடை இண்டிகோ.

13.ராபின் மின்ஸ் என்பவர் யார்

விடை: இவர் இந்தியன் பிரீமியர் லீக் போட்டியில் பங்கேற்கும் முதல் பழங்குடி இன கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

14.Dr.V.Mohinigiri என்பவர் யார்

விடை: இவர் தேசிய மகளிர்  ஆணையத்தின் முன்னால் தலைவர் மற்றும் பத்மபூஷன் விருது பெற்றவர் இவர் சமீபத்தில் காலமானார்.

15.எந்த நாள் நல்லாட்சி தினமாக அனுசரிக்கப்படுகிறது

விடை: டிசம்பர் 25 இந்தியாவின் முன்னாள் பிரதமர் ஆன அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களின் பிறந்த தினம் டிசம்பர் 25 ஆகும்.

16.கூரையில் அமைக்கப்படும் சூரிய சக்தி தகடுகள் மூலம் அதிகமான மின்சாரத்தை பெறுகின்ற மாநிலம் எது?

விடைகுஜராத்

17.
எந்த இந்திய நடனம் தொற்றுணர முடியாத மகத்தான கலாச்சார பாரம்பரியங்களின் பட்டியலில்(Intangible cultural Heritage list)சேர்க்கப்பட்டுள்ளது

விடை கர்பா நடனம் இது குஜராத் மாநிலத்தில் உள்ள கலைஞர் ஆனால் நிகழ்த்தப்படுகின்ற ஒரு பக்தி நடனம் ஆகும்.

18.காஷ்மீரில் அரசு மற்றும் அரசு சாரா தரப்பினர்களால் நடத்தப்பட்ட மனித உரிமை மீறல்களை விசாரித்து அது குறித்து அறிக்கை அளிப்பதற்காக அமைக்கப்பட்ட  ஆணையத்தின் பெயர் என்ன

விடை: உண்மை அறியும் மற்றும் நல்லிணக்க  ஆணையம்(Truth and reconciliation commission)

கூடுதல் தகவல்கள் இதற்கு உண்மை மற்றும் நீதியானையும் என்றும் உண்மை ஆணையம் என்றும் பல்வேறு பெயர்கள் வழங்கப்படுகிறது.


19.பாரதப் பிரதமர் காசி தமிழ் சங்கத்தில் உரையாற்றும் போது பயன்படுத்திய மொழி சேவை தொடர்பான நுண்ணறிவு அடிப்படையிலான செயல் கருவியின் பெயர் என்ன

விடை,பாஷினி.
20.சமீபத்தில் எந்த அணுமின் நிலையத்தில் புதிய அணு மின் அழகு செயல்பாட்டிற்கு வந்தது

விடை காக்ரபாரா.KAPP-4

21.இந்தியாவில் தற்போது எத்தனை அணு மின் உலைகள் உள்ளன

விடை 23

22.இந்தியாவில் எத்தனை மாநிலங்களில் அனுமின் உலைகள் உள்ளது

விடை ஏழு மாநிலங்களில்.


23.PRAYAS என்பது என்ன

விடை: இந்திய தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் பாதுகாப்பான முறையில் புலம்பெயர்வதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சிகள் எளிதாக்குவதற்காக இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.


24.PRAYAS 
என்பதன் விரிவாக்கம் என்ன


விடை Promoting Regular &Assisted Migration for youth and skilled professionals.
இதை சர்வதேச புலம் பெயர் அமைப்பு (international organisation for migration)ஏற்படுத்தியது.

25.இந்திய திறன்கள் அறிக்கை 2024 இன் படி அதிக வேலைவாய்ப்பு வளங்களை கொண்டிருக்கும் பிரிவில் முதல் மூன்று இடங்களை வகிக்கும் மாநிலங்கள் மொழியை எவை எவை 

விடை அரியானா மகாராஷ்டிரா மற்றும் ஆந்திர பிரதேசம்.

26.வேலைவாய்ப்பு பெறக்கூடிய இளைஞர்கள் அதிகமாக உள்ள மாநிலம் எது?

விடை  ஹரியானா

27.இந்தியாவில் அதிக வேலைவாய்ப்பு பெறக்கூடிய (Employable)இளைஞர்களை கொண்டுள்ள நகரமாக எது உள்ளது.

விடை பூனே

கூடுதல் தகவல்கள் அதை அடுத்து பெங்களூரும் திருவனந்தபுரமும் உள்ளன

28.18 முதல் 21 வயதுக்கு உட்பட்டவர்களில் அதிக வேலை வாய்ப்பு பெறக்கூடிய திறன்களைக் கொண்ட மாநிலம் எது

விடை தெலுங்கானா

29.26 முதல் 29 வயதுக்குட்பட்ட நபர்களில் அதிக வேலை வாய்ப்பு பெறக்கூடிய அளவு வளங்களைக் கொண்டுள்ள மாநிலம் எது?

விடை குஜராத்

30.இந்தியா எந்த  அமைப்பு சபைக்கு இரண்டு ஆண்டுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது

விடைIMO
31.IMO தலைமையிடம் எங்கு அமைந்துள்ளது

விடை லண்டன்

32.ஐக்கிய நாடுகள் அவை பட்டயத்தின் பிரிவு 99 எதைப்பற்றி பேசுகிறது

விடை சர்வதேச அமைதிக்கும் பாதுகாப்புக்கும் பங்கம் ஏற்படுகின்ற எந்த ஒரு விஷயத்தையும் ஐநா பாதுகாப்பு சபையின் கவனத்திற்கு கொண்டு வருகின்ற அதிகாரத்தை இந்த பிரிவு ஐநா சபையினுடைய பொதுச் செயலாளருக்கு வழங்குகிறது.

33.ஐநாவின்  பிரிவு 99 சமீபத்தில் எந்த நாட்டுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டது

விடை இஸ்ரேல்.

34.ஃபோர்ப்ஸ்   என்ற அமைப்பால் 2023 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட உலகின் சக்தி வாய்ந்த 100 பெண்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ள இந்திய பெண்மணிகள் யார் யார்

விடை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

எச் சி எல் நிறுவனத்தின் தலைவர் ரோஷினி நாடார்   மல்கோத்தரா

இந்திய உருக்கு ஆணையத்தின் தலைவர் சோமா மோண்டல்மற்றும்

பயோகான் நிர்வாகத் தலைவர் கிரண் மொசும்தார்

கூடுதல் தகவல்கள் இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளார்


35.
ஃபோர்ப்ஸ்  அமைப்பு வெளியிட்டுள்ள உலகின் சக்தி வாய்ந்த 100 பெண்கள் பட்டியலில் முதல் இடம் பெற்றுள்ள பெண்மணியின் பெயர் என்ன

விடை உர்சுலா வான் டேர் லேயன் இவர் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவராக உள்ளார்.

36.எஸ்சிகீபோ (Essequibo)என்ற பகுதி எந்த இரு நாடுகளுக்கு இடையே பிரச்சனைக்குரிய பகுதியாக விளங்குகிறது.

விடை காயானா மற்றும் வெனிசுலா

கூடுதல் தகவல்கள் இந்தப் பகுதி காயானா கட்டுப்பாட்டில் உள்ள எண்ணெய்வளம் மிக்க ஒரு பகுதியாகும் இதனை பக்கத்து நாடான வெனிசுலா கைப்பற்றி  கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள திட்டமிட்டுள்ளது

37.உலகின் முதல் நான்காம் தலைமுறை தொழில் நுட்பம் சார்ந்த அணு உலை பெயர் என்ன அது எந்த நாட்டில் அமைந்துள்ளது

விடை சிடாவான்(Shidaowan) இது சீனா நாட்டில் அமைந்துள்ளது

38.செயற்கை நுண்ணறிவினை பயன்படுத்துவதற்கான தெளிவான விதிகளை முதன்முதலாக வரையறுத்த நாடு அல்லது அமைப்பு எது

   விடைஐரோப்பியாஒன்றியம்
39.
எந்தப் பன்னாட்டு அமைப்பு 2023 ஆம் ஆண்டு நூற்றாண்டு விழாவை கொண்டாடியது

விடை இன்டர் போல்

கூடுதல் தகவல்கள் இது 1923 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட அமைப்பாகும் இதன் தலைமையகம் பிரான்ஸ் நாட்டின் லியோன் என்ற இடத்தில் அமைந்துள்ளது

40.பசுமைப் பயணம் 2050 என்ற திட்டத்திற்கு முன்னோடி நாடாக சர்வதேச கடல்சார் அமைப்பு எந்த நாட்டை  தேர்வு செய்துள்ளது.

விடை இந்தியா.

41.Storm makers II நடவடிக்கை என்பது என்ன

விடை இது interpol அமைப்பால் உலகின் பல்வேறு நாடுகளில் மனித கடத்தல் கடவுள் சீட்டு மோசடி ஊழல் தொலைத்தொடர்பு மோசடி பாலியல் செய்தல் போன்ற குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டுள்ள நபர்களை கைது செய்வதற்கான ஒரு நடவடிக்கை ஆகும்.


42.
கெலேபு(Gelephu)சீர்மிகு நகர திட்டம் என்பது எங்கு உருவாக்கப்படுகிறது.

விடை: இந்த நகரம் அசாம் எல்லையில் பூட்டான் நாட்டில் அமைந்துள்ள ஒரு நகரமாகும் இந்த சீர்மிகு நகர திட்டமானது தெற்காசிய பகுதியினை இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் வழியாக தென்கிழக்கு ஆசியாவுடன் இணைக்கும் ஒரு பொருளாதார வழித்தடம் உருவாக்க ஏற்படுத்தப்படும் ஒரு திட்டமாகும்.

43.சமீபத்திய கணக்கீட்டின்படி இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வேளாண்மை துறையின் பங்கு எத்தனை சதவீதம் என்ன

விடை: 15 சதவிகிதம்

கூடுதல் தகவல்கள் தொழில்துறை மற்றும் சேவை துறையின் விளைவான வளர்ச்சியின் காரணமாக 1990-91 ஆம் ஆண்டின் 35 சதவீதமாக இருந்த இந்தியாவின் ஒட்டுமொத்த உற்பத்தியில் வேளாண்மை துறையின் பங்கு தற்போது 15 சதவீதமாக குறைந்து உள்ளது.

44.வேளாண்மை மற்றும் அதை சார்ந்த துறைகளில் சராசரி வளர்ச்சி வீதம் தற்போது எவ்வளவு

விடைநான்குசதவிகிதம்.
45.மொபெல்லா தடுப்பூசி எந்த நோய்க்கு போடப்படுகிறது

விடை தட்டம்மை மற்றும் ரூபெல்லா

46.மொபைல்ல தடுப்பூசியை யார் தயாரித்தது.

விடை: வியட்நாம் நாட்டைச் சேர்ந்த பாலிவாக் இன்ஸ்டிட்யூட் என்ற நிறுவனத்துடன் இணைந்து Human biological institute  என்ற நிறுவனத்தின் இந்தியன் யூம்னாலஜிகல்ஸ்(IIL)என்ற இந்திய தடுப்பூசி நிறுவனம் தயாரித்துள்ளது.

47.Human biological institute  எங்கு அமைந்துள்ளது

விடை உதகமண்டலம்

கூடுதல் தகவல்கள் இந்த அமைப்பு இந்த ஆண்டு 2023 ஆம் ஆண்டு தனது 25 வது ஆண்டு விழாவினை கொண்டாடியது அதன் நினைவாகத்தான் மொபைல்லா என்ற தடுப்பூசி அறிமுகம் செய்யப்பட்டது

48.உலகின் மிகப்பெரிய அணுக்கரு இணைவு  உலை எது அது எங்கு அமைந்துள்ளது.

விடைJT60SA இது ஜப்பான் நாட்டில் அமைந்துள்ளது

49.ஜெமினி(Gemini) என்பது என்ன அது ஏன் சமீபத்தில் செய்திகளில் இடம் பிடித்தது.

விடை: இது கூகுள் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு அமைப்பு கூடுதல் தகவல்கள் இந்த ஜெமினி சைக்கிள் நுண்ணறிவு அமைப்பானது அல்ட்ரா மற்றும் நானோ ஆகிய மூன்று தனித்துவமான பயன்பாட்டு முறைகளை அறிமுகப்படுத்தி உள்ளது தற்போது பாரட் என்ற ஒரு செயற்கை நுண்ணறிவு சார்ந்த உரையாடல் மென்பொருளுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.


50.
கொசு பிரச்சனை தீர்ப்பதற்காக ஆந்திர பிரதேசம் ஒடிசா பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் கொசு மீன்களை பயன்படுத்துகின்றன கொசு மீன்களின் பூர்வீகம் எது

விடை அமெரிக்கா

51.இந்தியாவில் கொசு மீன்களை பயன்படுத்துவதால் எந்த விலங்கினும் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது

விடை தலைப்பிரட்டைகள். 

52.AMRIT தொழில்நுட்பம் என்பது என்ன

விடை: இது நீரிலிருந்து ஆர்சனிக் மற்றும் உலோக அயனிகளை அகற்றுவதற்காக சென்னை தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (IIT)தயாரித்தல் ஒரு புதிய தொழில்நுட்பம் ஆகும்.

53.Krutrim AI  என்பது என்ன

விடை: இது ஓலோ நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இந்தியாவின் முதல் செயற்கை  இயங்குதளம் ஆகும்.ChatGPT ஒத்திருந்தாலும் இது அதைவிட பல மடங்கு சிறப்பானதாகும் பல இது 20க்கும் மேற்பட்ட இந்திய மொழிகளை புரிந்து கொண்டு அதற்கு ஏற்றபடி பதிலை உருவாக்க முடியும்

54.TEMPO  செயற்கைக்கோள் என்பது எதைத் தொடர்புடையது இது யாரால் தயாரிக்கப்பட்டது

விடை: இது புவிநிலை சுற்றுப்பாதையில் உள்ள நாசாவின் முதலாவது புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் ஆகும்  இதுவளிமண்டல மாசுபாடுகள்  குறித்து ஒரு மணி நேரத்தில் ஒரு முறை அடிப்படை தகவல்களை வழங்குவதோடு இது காற்று தரம் குறித்த விரிவான தகவல்களை வழங்குகிறது.

55.கிர்தேசிய பூங்காவிற்கு அடுத்தபடியாக ஆசிய சிங்கங்களின் இரண்டாவது இடமாக இந்தியாவில் அறிவிக்கப்பட்டுள்ள வனவிலங்கு சரணாலயம் எது

விடை பர்தா வனவிலங்கு சரணாலயம் இது குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ளது சிங்கவளங்காப்பு @ 2047(Project tiger@2047) திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த வனவிலங்கு சரணாலயம் ஆசிய சிங்கங்களின் இரண்டாவது வாழிடமாக மாற குஜராத் மாநில அரசு திட்டங்களை மேற்கொண்டுள்ளது

56.இந்தியாவின் மிகப்பெரிய புலிகள் காப்பகம் எங்கு அமைய உள்ளது

விடை:மத்திய பிரதேசம் நௌராதேஹி மற்றும் ராணி துர்காவதி  ஆகிய இரண்டு வனவிலங்கு சரணாலயங்களையும் இணைத்து 2300 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் இது மத்திய பிரதேசத்தில் அமையப்பட உள்ளது.

57.மியா வாக்கி காடு வளர்ப்பு முறை என்பது என்ன.

விடை:நகர்ப்புறங்களில் சிறு அளவுகளில் அதாவது 20 சதுர மீட்டர் அளவுகளில் நகர்ப்புறங்களில் காடு வளர்ப்பதற்கான ஒரு முறையாகும் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த தாவரவியல் அறிஞர் அக்கிரா மியாசாவாக்கி என்பவருடைய பெயரால் தொடங்கப்பட்ட ஒரு திட்டமாகும் இந்தியாவில் தற்போது பிரபலமடைந்து வரும் திட்டத்தை நிலக்கரி இந்தியா நிறுவனத்தினுடைய தென்கிழக்கு  நிலக்கரி ஸ்வரங்கள் லிமிடெட் என்ற அமைப்பு இதனை இந்தியாவில் முதன் முதலில் நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளது

58.அடையாளம் காணக்கூடிய குற்றங்கள் என்ற அடிப்படையில் இந்தியாவின் பாதுகாப்பு நகரமாக உள்ள நகரம் எது

விடை   கொல்கத்தா இது இந்தியாவில் மூன்றாவது ஆண்டாக நகரமாக அறியப்பட்டு வருகிறது இதனைத் தொடர்ந்து பூனே ஹைதராபாத் ஆகியவை இரண்டு மற்றும் மூன்றாம் இடத்தை பெற்றுள்ளது நான்காவது எழுத்து சென்னையும் ஐந்தாவது இடத்தை கோவையும் ஆறாவது இடத்தில் சூரத் நகர்வும் பெற்றுள்ளது பெண்களுக்கு எதிரான குற்றங்கள் புரிவதில் டெல்லி முதலிடத்தில் உள்ளது

59.விவசாயிகள் தற்கொலை செய்வதில் முதலிடத்தில் இருக்கும் மாநிலம் எது?

விடை மகாராஷ்டிரா அதேபோல பொதுவான தற்கொலை செய்வதிலும் மகாராஷ்டிரா முன்னிலை வகிக்கிறது அதைத் தொடர்ந்து தமிழ்நாடு மத்திய பிரதேஷ் கர்நாடகா கேரளா தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் உள்ளன

60.மிசோரம் மாநிலத்தின் புதிய முதலமைச்சர் பெயர் என்ன

விடை டை லால்துஹோமா. 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் மிசோரம் தேசியவாத கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது

61.சதீஷ்கர் மாநிலத்தின்  புதிய முதலமைச்சர் பெயர் என்ன

விடை விஷ்ணு டியோ சாய் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாரதி ஜனதா கட்சி ஆட்சி அமைக்கிறது

62.மத்திய பிரதேஷ் மாநிலத்தின் புதிய முதல்வர் பெயர் என்ன

விடை மோகன் யாதவ் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைத்தது.

63.ராஜஸ்தான் மாநிலத்தின் புதிய முதலமைச்சருடைய பெயர் என்ன

விடை பஜனலால் சர்மா இந்த மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் பாரதி ஜனதா கட்சி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தது

64.கல்வி கற்ற பெண்களிடையே மொத்த கருவுதல் விகிதம்(Total fertility rate) அதிகமாக உள்ள மாநிலம் எது.

விடை கேரளா

65.2024 ஆம் ஆண்டு இந்திய திறன்கள் அறிக்கையின் படி பணியாற்றுவதற்கு அதிக விருப்பமுள்ள மாநிலமாக எது கருதப்படுகிறது

விடை கேரளா

66.UNHCR  அகதிகள் விருது 2023 ஆம் ஆண்டுக்கு யாருக்கு வழங்கப்பட்டது

விடை அப்துல்லா மீரே சோமாலியா நாட்டில் பிறந்தவர் கிங்கியா நாட்டில் அகதி குழந்தைகளுக்கு புத்தகம் பழகி அவருடைய கல்வி உரிமைக்காக பாடுபட்டார் இவருக்கு இந்த விருது 2023 ஆம் ஆண்டு விருது வழங்கப்பட்டது

67.54வது சர்வதேச திரைப்பட விழா எந்த ஊரில் நடைபெற்றது

விடை கோவா

68.54 வது சர்வதேச திரைப்பட விழாவில் சத்யஜித்ரே வாழ்நாள் சாதனையாளர் விருது யாருக்கு வழங்கப்பட்டது

விடை ஹாலிவுட் நடிகரும் தயாரிப்பாளருமான மைக்கேல் டக்ளஸ் என்பவருக்கு இது வழங்கப்பட்டது

69.சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படமாக தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படம் எது

விடை காந்தாரா

70.சர்வதேச திரைப்பட விழாவில் தங்கமயில் விருதை பெற்ற திரைப்படம் எது

விடைEndless  border

71.சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருது யாருக்கு வழங்கப்பட்டது

விடை ஈரானிய நடிகர் பூரியா ரஹீமே சாம் என்பவருக்கு Endless borders  என்ற திரைப்படத்தில் நடித்ததற்காக இந்த விருது வழங்கப்பட்டது


72.ICFT-UNESCO  காந்தி மெடல் எந்த திரைப்படத்திற்காக சர்வதேச திரைப்பட விழாவில்  விருது வழங்கப்பட்டது.

Drift.

73.இந்திரா காந்தி அமைதி  பரிசு யாருக்கு 2003 ஆம் ஆண்டுக்கு வழங்கப்பட்டது

விடை டேனியல் போர்ன் போயிம்  மற்றும் அலி ஹபு அவ்வாத். இஸ்ரேல் பாலஸ்தீன மோதலுக்கு தீர்வாக இஸ்ரேல் மற்றும் அரபு நாடுகளின் இளைஞர்களை ஒருங்கிணைப்பதில் இவர்கள் மேற்கொண்ட முயற்சிக்காக இந்த விருது இவர்களுக்கு வழங்கப்பட்டது.

74.2023 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது தமிழில் யாருக்கு வழங்கப்பட்டது

விடை தேவி பாரதி இவர் எழுதிய நீர்வழி படூவஉம் என்ற புதினத்திற்கு இந்த விருது வழங்கப்பட்டது இந்த நூல் தமிழ்நாட்டின் கொங்கு மண்டலத்தில் உள்ள குடி நாவிதர் என்ற முடி  திருத்தும்சமூகத்தினரின் வாழ்க்கையை சித்தரிக்கிறது.

75.திரு எம் எஸ் வீரராகவன் என்பவர் ஏன் சமீபத்தில் செய்திகளில் இடம் பிடித்தார்

விடை இவர் கொடைக்கானலில் ரோஜாப்பூ ஆர்வலர் இவர் எழுதிய Roses in the fire of spring  என்ற நூல் ரோஸ் கலப்பினங்களை பற்றிய புகழ்பெற்ற நூலாகும் இவர் சமீபத்தில் இயற்கை எழுதியுள்ளார்

76.நடிகர் விஜயகாந்த் ஏன் சமீபத்தில் இடம் பிடித்தார்

விடை இவர் தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் என்ற கட்சியின் தலைவர் இந்த கட்சி 2005 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 29 இடங்களை பெற்று எதிர்க்கட்சித் தலைவராக இவர் உருவானார். இவர் சமீபத்தில் மரணம் அடைந்தார்

டிசம்பர் 2023 உலக நிகழ்வுகள்.

1. ஹென்றி கிஸ்ஸிங்கர் என்பவரை பற்றி குறிப்பிடுக.

விடைஅமெரிக்காவின் முன்னாள்  வெளி உறவுத்துறை அமைச்சர். இவர் தனது நூறாவது வயதில் காலமானார் வியட்நாம் போர் அர்ஜென்டினா ராணுவ ஆட்சிக்கு மறைமுக ஆதரவு 1971 ஆம் ஆண்டு நடைபெற்ற வங்கதேச விடுதலைப் போரின் போது பாகிஸ்தானுக்கு ஆதரவு ஆகியவற்றில் இவருடைய பங்களிப்பு இருந்ததாக கருதப்படுகிறது.

2.Rizz  என்பது என்ன

விடைஆக்ஸ்போர்ட்  பல்கலைக்கழக பதிப்பகமானது z எனும் எழுத்தின் தலைமுறையில் மொழியியல் தேர்வுகளை பிரதிபலிக்கின்ற இந்த வார்த்தையினை இந்த ஆண்டின் சிறந்த வார்த்தையாக தேர்ந்தெடுக்க பட்டு வெளியிட்டுள்ளது. இது மற்றொரு நபரை ஈர்க்கும் அல்லது கவர்ந்திழுக்கும் ஒருவரின் திறனை விவரிக்க பயன்படுத்தப்படும் சொல் ஆகும்.

3.சர்வதேச புலம் பெயர் அமைப்பு எந்த ஆண்டு ஏற்படுத்தப்பட்டது

விடை 1951.

4.பன்னாட்டு கடல் அமைப்பின்(IMO) தலைவர் யார்

விடை ஹர்சினியோ டுமிங்கெஸ்(Arsenio Dominguez).


5.ஐநா சபையானது 2024 ஆம் ஆண்டு எந்த நாடாக அனுசரிக்க திட்டமிட்டுள்ளது

விடை சர்வதேச ஒட்டகங்கள் ஆண்டு

6.சமீபத்தில் தேர்வாண எகிப்து நாட்டின் புதிய அதிபரின் பெயர் என்ன

விடைஅப்தெல் ஃபத்தா அல்-சிசி. இவர் மூன்றாவது முறையாக இந்நாட்டின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்க ஒன்று ஆகும்

7.பாஸ்பரிட்டி கார்டியன் நடவடிக்கை என்பது எந்த நாட்டால் ஏன் ஆரம்பிக்கப்பட்ட ஒரு நடவடிக்கையாகும்

விடை அமெரிக்க ஐக்கிய நாடு பிராஸ்பரிட்டி கார்டியன் நடவடிக்கை எதற்காக ஆரம்பிக்கப்பட்டது செங்கடலில் பாதுகாப்பு உறுதி செய்வதற்காக அமெரிக்க ஐக்கிய நாடு இந்த நடவடிக்கை மேற்கொண்டது ஏமான் நாட்டினை சேர்ந்த ஹவுதி போராளிகள் தொடர்ச்சியாக வாணிக கப்பல்களை தாக்கியுள்ளனர் அவர்கள் இருந்து மீட்பதற்காக இந்த நடவடிக்கையை அமெரிக்க ஐக்கிய நாடு மேற்கொண்டுள்ளது.

8..போண்டஸ் என்பது என்ன.

விடை: தென்கிழக்கு ஆசியாவில் சுமார் 20 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன பழைய கண்ட தட்டு இது ஆகும் அறிவில் அறிஞர்கள் தென் சீன கடலில் இதற்கான ஆதாரங்களை கண்டறிந்து உள்ளனர்.

9..குழப்பங்களின் கடவுள்(God of Chaos) என்பது என்ன.

விடை: பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கின்ற சிறு கோள் சிறு கோளான அபோபிஸ்  என்பதற்கு குழப்பங்களின் கடவுள் என்று பெயர் இது 2029 ஆம் ஆண்டு ஏப்ரல் 13ஆம் தேதி பூமிக்கு மிக அருகில் பயணிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது இதனை ஆய்வு செய்வதற்காகOSIRIS-RExஎன்ற விண்கலத்தை அமெரிக்க நாசா நிறுவனம் தயாரித்து அனுப்பி உள்ளது.

டிசம்பர் 2023 விளையாட்டு செய்திகள்.

1..கேலோ இந்தியா திட்டம் என்பது என்ன

விடை இது மாணவர்களிடையே விளையாட்டு கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்காக  மத்திய அரசால் ஏற்படுத்தப்பட்ட ஒரு திட்டம் இது 2018 ஆம் ஆண்டு அப்போதைய விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜாவர்தன், ராத்தூர் என்பவரால் தொடங்கி வைக்கப்பட்டதுஏற்படுத்தப்பட்ட  ஒரு மத்திய அரசின் திட்டமாகும் 17 வயதுக்கு குறைந்த பள்ளி மாணவர்களும் 21 வயதுக்கு குறைந்த கல்லூரி மாணவர்களும் இந்த திட்டத்தில் தங்களை பதிவு செய்து கொண்டு அதற்கான பயிற்சி மேற்கொள்ளலாம் இந்த திட்டத்தில் 26 விளையாட்டுப் போட்டிகள் உள்ளன

2..2024 ஆம் ஆண்டு கேலோ விளையாட்டுப் போட்டிகள் எங்கு நடைபெற உள்ளது

விடை இந்த போட்டிகள் தமிழ்நாட்டில் நடைபெற உள்ளது. இந்த போட்டிகள் இந்த ஆண்டு ஜனவரி 19 முதல் 31 வரை தமிழ்நாட்டில் நடைபெற்றது தமிழ்நாட்டில் உள்ள சென்னை கோயம்புத்தூர் மதுரை திருச்சி ஆகிய நகரங்களில் இப்போட்டிகள் நடைபெற்றன கூடுதல் தகவல்கள் இந்த போட்டியில் வெற்றி பெறும் ஆயிரம் இளைஞர் இளைஞிகளுக்கு ஆண்டுக்கு 5 லட்சம் வீதம் எட்டு ஆண்டுகளுக்கு கல்வித் தொகை வழங்கப்படுகிறது இதன் மூலம் பல்நாட்டு போட்டிகளில் பங்கேற்பதற்கு தங்களை தயார் செய்து கொள்ள இந்த பணம் உதவியாக இருக்கும்

3..தேசிய குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் வென்ற பட்டம் என்ற இரண்டாவது இளம்  மகளிர்நபரின் பெயர் என்ன

விடை அனாகத் சிங் யுவர் டெல்லியை சேர்ந்தவர்.

கூடுதல் தகவல்கள் சென்னையைச் சேர்ந்த ஜோஷ்னா சின்னப்பா என்பவர் இந்தியாவின் இளம் சாம்பியன் என்ற பட்டத்தை 2000 ஆம் ஆண்டு பெற்றார் அந்தப் பட்டத்தை பெறுகின்ற போது அவருடைய வயது 14 ஆகும்

4..2023 ஆம் ஆண்டுக்கான மூத்தோர் தேசிய குவாஷ் சாம்பியன்ஷிப் ஆடவர் பிரிவில் வெற்றி பெற்றவர் பெயர் என்ன

விடை வேலவன் செந்தில்குமார் இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்

5.2023 ஆம் ஆண்டுக்கு எத்தனை நபர்களுக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

விடை 26 நபர்களுக்கு

6.2023 அர்ஜுனா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு  உள்ளவர்களின் பெயர்களை குறிப்பிடு.

விடை

1. ஓஜஸ் பிரவின் டியோடேல் (வில்வித்தை)
2. அதிதி கோபிசந்த் சுவாமி (வில்வித்தை)
3. ஸ்ரீசங்கர் எம் (தடகளம்)
4. பாருல் சௌத்ரி (
5ஹாம் ) ஹுசாமுதீன் (குத்துச்சண்டை)
6. ஆர் வைஷாலி (செஸ்)
7. முகமது ஷமி (கிரிக்கெட்)
8. அனுஷ் அகர்வாலா (குதிரையேற்றம்)
9. திவ்யகிருதி சிங் (குதிரையேற்றம்)
10. திக்ஷா தாகர் (கோல்ப்)
11. கிரிஷன் பகதூர் பதக் (ஹாக்கி)
12. புக்ரம்பம் சுசீலா சானு (ஹாக்கி)
13. பவன் குமார் (கபடி)
14. ரிது நேகி (கபடி)
15. நஸ்ரீன் (கோ-கோ)
16. திருமதி பிங்கி (புல்வெளிக் கிண்ணங்கள்)
17. ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் (படப்பிடிப்பு)
18. (துப்பாக்கி சூடு)
19. ஹரிந்தர் பால் சிங் சந்து (ஸ்குவாஷ்)
20. அய்ஹிகா முகர்ஜி (டேபிள் டென்னிஸ்)
21. சுனில் குமார் (மல்யுத்தம்)
22. திருமதி ஆண்டிம் (மல்யுத்தம்)
23. நௌரெம் ரோஷிபினா தேவி (வுஷு)
24. ஷீதல் தேவி (பரா அரேச்சர்)
25. இல்லூரி அஜய் குமார் ரெட்டி (பார்வையற்ற கிரிக்கெட்)
26. பிராச்சி யாதவ் (பாரா கேனோயிங்)

7.2023 ஆம் ஆண்டுக்கு அர்ஜுனா விருதுக்கு தகுதி பெற்றுள்ள தமிழ்நாட்டு விளையாட்டு வீரர் யார்

விடை வைஷாலி ரமேஷ் பாபு என்கின்ற சதுரங்க விளையாட்டு வீராங்கனை கூடுதல் தகவல் இந்த ஆண்டு அவர் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்றார் இதன் மூலம் இந்தியாவில் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்ற மூன்றாவது பெண்மணி என்ற பெருமையை இவர் பெறுகிறார்

8.கிரிக்கெட் விளையாட்டு துறையில் 2023 ஆம் ஆண்டு யாருக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட்டுள்ளது

விடை முகமது ஷாமி.


8.
மேஜர் தியான் சந்த் என்பவர் யார்

விடை ஹாக்கியின் “தி விஸார்ட்” என்று புகழ்பெற்ற மேஜர் தியான் சந்த், 1926 முதல் 1949 வரை சர்வதேச ஹாக்கியில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்திய ஒரு விதிவிலக்கான திறமையான வீரர் ஆவார், அவர் 400 க்கும் மேற்பட்ட கோல்களை குவித்தார்.
அலகாபாத்தைச் சேர்ந்த தியான் சந்த் 1928, 1932 மற்றும் 1936 ஆம் ஆண்டுகளில் ஒலிம்பிக் தங்கம் வென்ற அணிகளில் முக்கிய அங்கமாக இருந்தார்.

9.இந்தியாவில் தேசிய விளையாட்டு தினம் எந்த நாளில் யாருடன் நினைவாக கொண்டாடப்படுகிறது

விடைஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 29 ஆம் தேதி, மேஜர் தியான் சந்தின் நினைவாக இந்தியா தேசிய விளையாட்டு தினமாக அனுசரிக்கப்படுகிறது.

10.மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருது 2023 விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு  உள்ளவர்களின் பெயர்களை குறிப்பிடு.

விடை1. சிராக் சந்திரசேகர் ஷெட்டி (பேட்மிண்டன்)

2. ரங்கிரெட்டி சாத்விக் சாய் ராஜ் (பேட்மிண்டன்)

11.விளையாட்டு மற்றும் விளையாட்டுகளில் சிறந்த பயிற்சியாளர்களுக்கான துரோணாச்சார்யா விருது 2023 யார் யாருக்கு வழங்கப்பட்டது

விடை
1. லலித் குமார் (மல்யுத்தம்)
2. ஆர்பி ரமேஷ் (செஸ்)
3. மஹாவீர் பிரசாத் சைனி (பாரா தடகளம்)
4. சிவேந்திர சிங் (ஹாக்கி)
5. கணேஷ் பிரபாகர்
தேவ்ருக்கர் (மல்லகாம்ப்)

12.2023 ஆம் ஆண்டில் சிறந்த பயிற்சியாளருக்கான துரோணாச்சாரியார் விருது யாருக்கு வழங்கப்பட உள்ளது

விடைசிறந்த பயிற்சியாளர்களுக்கான துரோணாச்சார்யா விருது (வழக்கமான பிரிவு):

லலித் குமார் (மல்யுத்தம்),

ஆர்.பி.ரமேஷ் (செஸ்),

மஹாவீர் பிரசாத் சைனி (பாரா தடகளம்),

சிவேந்திர சிங் (ஹாக்கி), கணேஷ்

பிரபாகர் தேவ்ருக்கர் (மல்லகாம்ப்).

13.சிறந்த பயிற்சியாளர்களுக்கான துரோணாச்சார்யா விருது யாருக்கு வழங்கப்பட உள்ளது (வாழ்நாள் பிரிவு):

விடை;ஜஸ்கிரத் சிங் கிரேவால் (கோல்ப்),

பாஸ்கரன் இ (கபடி),

ஜெயந்த குமார் புஷிலால் (டேபிள் டென்னிஸ்).

14.வாழ்நாள் சாதனைக்கான தயான் சந்த் விருது 2023 ஆம் ஆண்டு யாருக்கு வழங்கப்பட உள்ளது:

விடை

மஞ்சுஷா கன்வார் (பேட்மிண்டன்),

வினீத் குமார் சர்மா (ஹாக்கி),

கவிதா செல்வராஜ் (கபடி).

15.அனீஸ் பன்வாலா என்பவர் யார்

விடைஇவர் இந்திய துப்பாக்கி சுடுதல் வீரர் இவர் கத்தார் நாட்டின் தோகா நகரில் நடைபெற்ற உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் வெண்கல பதக்கத்தை வென்றுள்ளார்.

16.சவுதி அரேபியாவின் ரியாத்து நகரில் ஆசிய மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக் குழுவினால் நடத்தப்பட்ட நான்காவது ஆசிரிய விருதுகள் விழாவில் யாருக்கு சிறந்த இளைய தடகள வீராங்கனை பட்டம் வழங்கப்பட்டது

விடை ஷீதல் தேவி.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Home
Call
Mail
error: Content is protected !!